சர்வதேச தாய்மொழி நாள் பிப்ரவரி 21

ADIRAI FM 90.4 BLOGGER சர்வதேச தாய்மொழி நாள் பன்னாட்டுத் தாய்மொழி நாள் ( International Mother Language Day ) பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதுமொழி,பண்பாட்டு பன்மையையும் உலகின் பல மொழிகளையும் மேம்படுத்தலுக்கான விழிப்புணர்வை வென்றெடுக்க கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் முதலில் யுனெசுக்கோவால் 1999 ஆம் ஆண்டு நவம்பர்17 இல் அறிவிக்கப்பட்டது. இது பன்னாட்டுத் தீர்மானம் 56/262 வழி பன்னாட்டுப் பொதுமன்றில் முறையாக 2002 இல் ஏற்கப்பட்டது . .தாய்மொழி நாள் என்பது பன்னாட்டவையில் 2007 ஆம் ஆண்டு மே 16 இல் முன்னெடுத்த 61/266 தீர்மானத்தின்படி "உலக மக்கள் மொழிகளைப் பேணி வளர்த்தலையும் பாதுகாத்தலையும் வென்றெடுக்கும் விரிவான முன்முயற்சியின்" ஒரு பகுதியே ஆகும். இத்தீர்மானம் 2008 ஆம் ஆண்டை பன்னாட்டு மொழிகளுக்கான ஆண்டாகவும் அறிவித்தது.. நமது சமூகம்... நமது நலன்... .