கணிதமா... கடினமா... MATHEMATICS DAY | கணிதப் பட்டதாரி ஆசிரியை சுதா M.sc....


கணிதமா... கடினமா...

                  

தேசிய கணிதவியல் தினத்தை முன்னிட்டு கணிதம் என்றாலே சிரமம் என்பதற்கு மத்தியில் கணிதத்திற்கு பின்னாலும் பல சுவாரசியங்கள் உண்டு என பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட பட்டுக்கோட்டை இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியை
"சுதா M.sc.,B.Ed.," அவர்களின் நேர்காணல் நிகழ்ச்சியை முழுவதுமாக தொடர்ந்து கேளுங்கள். 

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது அதிரை எப்எம் அதிரை எப்எம் 904 நமது சமூகம் நமது நலன் 
Adirai FM RADIO LIVE LINK: https://listen.radioking.com/radio/188161/stream/230320 

நம்ம அதிரை எப்எம்ல நீங்களும் ஆர்ஜே ஆகி உங்க பேச்சு திறமையை இந்த உலகத்துக்கு காட்ட விரும்புறீங்களா இதோ வந்தாச்சு அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பகுதிகள்ல வசிக்கக்கூடிய பெண்களுக்கு உங்களோட திறமையை வெளிப்படுத்துறதுக்கான ஒரு அறிய வாய்ப்பு வந்தாச்சு மேலும் தகவல் அறிய 73737 76904 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் இது நம்ம அதிரை எப்எம் 904 நமது சமூகம் நமது நலன் 


நேர்காணலின் போது 

வாழ்த்துக்கள் நேயர்களே இது நம்ம அதிரை பன்மலை 904 நமது சமூகம் நமது நலன் இன்னைக்கு என்ன சிறப்பு நிகழ்ச்சி அப்படின்னு கேக்குறீங்களா தேதி டிசம்பர் 22 தேசிய கணிதவியல் தினம் இந்த தினத்துல நம்ம கூட நிகழ்ச்சிக்காக இணைந்திருக்காங்க கணித ஆசிரியை சுதா அவர்கள் வாழ்த்துக்கள் மேம் உங்களை பத்தி ஷேர் பண்ணிக்கோங்க 

தேசிய கணித நாளை கொண்டாடும் நேயர்களுக்கு வாழ்த்துக்கள் என் பெயர் சுதா நான் பட்டதாரி ஆசிரியராக கணிதத்துல புனித இசவேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில நான் வேலை பார்த்துட்டு இருக்கிறேன் 

 இப்போ இந்த மேக்ஸ்ஸ்க்குன்னு சொல்லி ஒரு டே செலிப்ரேட் பண்றதுக்கான ரீசன் என்ன மேம் 

இது சீனிவாச ராமானுஜம் நம்ம கணித மேதையாக நம்ம கொண்டாடுகிற ஒரு பெரிய மாமனிதர் அவரு அவருடைய பிறந்த தினமான இந்த டிசம்பர் 22 வந்து நம்ம தேசிய கணித தினமாக கொண்டாடுறோம் அதுல நம்ம பெருமையும் அடையறோம் 

இப்போ இந்த டிசம்பர் 22 கணிதவியல் தினம் அப்படிங்கறது எப்போலிருந்து அனுசரிக்கப்பட்டுட்டு இருக்கு


 இது வந்து 2012 ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுது ஏன்னா அந்த கணித மேதையை வந்து அவருடைய கணித பங்களிப்பு வந்து நம்மளுடைய நாட்டுக்கு ரொம்ப துணை புரிஞ்சதுனால இதை வந்து நம்ம தேசிய கணித நாளாக அறிவிச்சிருக்காங்க 

இப்போ மேக்ஸ்ஸ்க்குன்னு ஒரு டே கொண்டு வரணும்னு யாரு முதல்ல இதை முடிவு பண்ணது யார் இதை அறிமுகப்படுத்தியது 

இது 2012ல அப்ப இந்திய பிரதமரா இருந்த மன்மோகன் சிங் அவர்களால இந்த கணித மேதை ராமானுஜம் அவர்களுக்கு பாராட்டும் விதமாக இந்த நாளை தேசிய கணித நாளாக கொண்டாடுறாங்க 

இந்த தேசிய கணித தினம் அப்படிங்கறது இந்திய அளவுல எங்கெங்கெல்லாம் செலிப்ரேட் பண்றாங்க இந்திய அளவுல எல்லா பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்த கணிதத்தை வந்து முக்கியத்துவப்படுத்தணும் 

இதனுடைய முக்கியமான தீமே என்ன அப்படின்னா அனைவருக்கும் கணிதம் அந்த எண்ணத்தை வந்து எல்லா மாணவர்கள் மத்தியிலும் நம்ம ஊட்டணும்ன்ற எண்ணத்துல தான் இந்த நாளை கணித நாளை கொண்டாடிட்டு இருக்கோம் 

 இப்போ அன்றாட வாழ்க்கையில இந்த கணிதத்துடைய பயன்பாடுங்கிறது எந்த அளவுக்கு இருக்கு அன்றாட வாழ்க்கையில கணிதத்தினுடைய பயன்பாடு அப்படிங்கும் போது காலையில எழுந்து நம்ம பல் துலக்குறதுல இருந்து அறிவியல் துறையில நம்ம ஒரு ராக்கெட் அனுப்புறது வரைக்கும் கணிதம் தான் கணிதம் இல்லாம கணித வாய்ப்பாடு இல்லாம நம் நம்மளுடைய செயல்பாடுகளே இல்லைன்னு சொல்லலாம் நம்ம படைப்பே நமக்கு கணிதம் தான் ஏன்னா நம்மளுடைய இப்ப முக முகத்தை எடுத்துக்கிட்டோம் அப்படின்னா இந்த ரெண்டு கண்களும் சரியான இடைவெளியில இருந்து அந்த மூக்கு வாய் இதெல்லாம் வந்து சரியா இருந்துச்சு அப்படின்னா நம்ம அதை வந்து அழகு அப்படின்னு சொல்றோம் அழகா இருக்குறாங்க அப்படின்னு சொல்றோம் சோ இப்ப அதனுடைய வடிவங்கள் மாறினாலே நமக்கு வந்து நம்ம வித்தியாசப்படுறோம் அப்போ இதுவே வந்து அன்றாட வாழ்க்கையில படைப்பிலிருந்து ஆரம்பிச்சு நமக்கு கணிதம் வந்து எவ்வளவு துணை புரியுது அப்படின்னு சொல்றான்

இப்போ கணிதவியலின் ஜாம்பவான் அப்படின்னு அழைக்கப்படக்கூடிய ஸ்ரீ ராமானுஜர் இருக்காங்க இல்லையா அவங்களுடைய கணித திறமையை வெளிப்படுத்தும் விதமா ஏதாவது சில சம்பவங்கள் பத்தி எங்க கூட ஷேர் பண்ணங்க 

இப்போ சீனிவாச ராமானுஜம் அவர் வந்து சிறுவயதிலிருந்தே கணிதத்தின் மேல மிகுந்த ஆர்வம் அவருக்கு மற்ற துறைகளை காட்டிலும் அவருக்கு கணிதத்துல வந்து அவ்வளவு ஆர்வம் இருக்கிறதுக்கு என்ன காரணம் அப்படின்னா அவருடைய புரிதல் திறன் தான் சரியா புரிஞ்சுகிட்டாரு 

அந்த ஒவ்வொரு நிமிஷமும் அந்த புரிஞ்சுகிட்ட அந்த கணிதத்தை உடனே அதை செயல்படுத்தி காமிச்சாரு இப்ப ஒரு சின்ன விஷயம் பார்த்தீங்கன்னா ராமானுஜம் எண் அப்படின்னு சொல்லிட்டு நம்ம என்ன செய்வோம்னா ஒரு நம்பர் இருக்குது என்னன்னா 1729 அப்படின்றது ராமானுஜம் எண் அப்படின்னு சொல்றோம் இது என்ன அப்படின்னா அவருடைய வாழ்க்கையில நடந்த ஒரு விஷயம் அவரு ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு இருக்கும் பொழுது

 மருத்துவமனையில அவரை அட்மிட் பண்ணி இருக்காங்க அப்ப கணிதம் ஹார்டி வந்து அவரை பார்க்க வராரு அவர் பார்க்க வரும்பொழுது அவர் வாடகைக்கு கார் எடுத்துட்டு வந்து பார்க்கும் பொழுது அவர் எதேச்சியா அந்த வார்த்தையை சொல்றாரு நான் வந்து வாடகைக்கு கார் எடுத்துட்டு வந்தேன்

 அந்த காரினுடைய எண் 1729 இது ஒரு சுவாரசியமே இல்லாத எண் மாதிரி தெரியுது அப்படின்னு ராமானுஜர்ட்ட சொன்னவுடனே அவர் சொல்ற விஷயம் இல்ல இதுல வந்து மிகப்பெரிய சுவாரசியம் அடங்கி இருக்குது அப்படின்னு சொல்லிட்டு அந்த 1729 அது ஒன்னினுடைய கனமாகவும் ஒன்னின் கனத்தையும் அதே நேரத்துல 12ன் கனத்தையும் நம்ம கூட்டுனோம்

 அப்படின்னா இந்த கூட்டுத்தொகை வந்து 1729 வரும் அப்படின்னு சொன்னாரு இதையே இன்னொரு விதமாகவும் 10ன் கனத்தையும் அதாவது 10³ 10³ன்னா 1000 அது வந்து அதுக்கப்புறம் 9³ 9³ அப்படிங்கறது 729 1000 யும் 729 யும் கூட்டுனோம்னா 1729 வரும் அப்படின்னா கையில ஒரு எந்தவிதமான ஒரு பேனா பென்சில் இல்லாமலே மனக்கணக்காகவே உடனே அந்த நம்பருக்குரிய சுவாரசியத்தை சொல்லிக் காமிச்சது 

இந்த கணித மேதையினுடைய கணித ஆர்வத்தை நமக்கு ரொம்பவே வெளிப்படுத்துது இன்னொரு விஷயம் அவர் ரொம்ப சிறுவயதா இருக்கும்போது வகுப்பறையில ஆசிரியர் பாடம் நடத்திட்டு இருக்காரு அப்போ வகுத்தல் நடத்தும் பொழுது ரெண்டை ரெண்டால் வகுத்தால் அதனுடைய விடை வந்து ஒன்னு வரும் அப்படின்னு சொல்றாரு ஐந்தை ஐந்தால் வகுத்தால் ஒன்னு வரும் அப்படின்னு சொல்றாங்க அப்ப இவர் எழுந்திருச்சு கேக்குறாரு அப்ப ஜீரோவை ஜீரோவால வகுத்தா ஒன்னு வருமா சார் ஆன்சர் அப்படின்னு சொல்லும்பொழுது அவர் ஆசிரியருக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு 

இவ்வளவு சிறு பையனா இருந்தும் இவனுக்கு இவ்வளவு அறிவு எங்கிருந்து வந்துச்சு அப்படின்னு அவர் ஆச்சரியப்பட வச்சது அவருடைய வாழ்க்கையில அவர் கணிதத்தை எந்த அளவுக்கு சுவாசிச்சாரு அப்படின்றதை நமக்கு தெரியப்படுத்துது இப்பவே ஸ்கேன் பண்ணுங்க ரெஜிஸ்டர் பண்ணுங்க

இதுவரையும் நமக்கு எழுத்துக்களுடைய தோற்றம் எப்படி உருவானுச்சு அப்படின்றதை பத்தி நமக்கு தெரிஞ்சிருக்கும் ஆனா எண்களுடைய தோற்றம் பத்தி பெரும்பாலானவங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை சோ இந்த மேக்ஸ்ல இருக்க எண்கள்ங்கிறது எப்படி உருவானது மேம் எண்கள்

 அப்படிங்கறதுக்கு முன்னாடி பார்த்தீங்க அப்படின்னா பண்டைய காலத்துல இப்ப ஒரு ஆடு மேய்க்கிற தொழில் பண்றாங்க அப்படின்னா அவங்க அவங்க அவங்கள்ட்ட இருக்கக்கூடிய ஆடுகளை வந்து அவங்க எத்தனை அப்படிங்கறத கண்டுபிடிக்க முடியாது அப்போ அங்க இருக்கக்கூடிய கற்களை எடுத்து என்ன பண்ணுவாங்கன்னா ஆடை வந்து மேய விடும் பொழுது ஒரு ஒரு ஆடா வெளியில பட்டியிலிருந்து வெளில விடும் பொழுது ஒரு ஒரு கற்களா எடுத்து பையில போட்டுக்குவாங்க அடுத்தது அந்த ஆடுகள் எல்லாம் மேஞ்சு வந்ததுக்கு அப்புறமா கடைசியா பட்டியில கொண்டு போய் அடைக்கும் பொழுது ஒவ்வொரு ஆடா உள்ள விடும் பொழுது ஒவ்வொரு பையில இருக்கக்கூடிய ஒவ்வொரு கல்லை எடுத்து வெளியில விடுவாங்க

 அப்படித்தான் அவங்களுடைய எண்ணுதல் இருந்துச்சு அப்புறம் காலப்போக்குல அவங்க ஒவ்வொரு எண்களுக்கும் ஒரு ஒரு சிம்பல் வச்சுக்கிட்டாங்க அதாவது புலித்தலை அப்படின்னா அதை ஒன்னு வச்சுக்கணும் ஒரு புலித்தலை வரைஞ்சாங்கன்னா அது அவங்களுடைய எண்ணங்கள்ல அது ஒன்னு அப்படின்னு பிரதிபலிக்கும் 

அதேபோல ஆட்டுத்தலை வரைஞ்சாங்க அப்படின்னா அது ரெண்டு ஒரு மரம் வரைஞ்சாங்க அப்படின்னா அது மூணு அப்படின்னு சொல்லி எண்களை அவங்க அந்த வடிவத்துல கொண்டு வந்தாங்க அதுக்கப்புறம் வந்து உங்களுக்கு பாபிலோனியர்கள் வருகை இருந்துச்சு 

பாபிலோனியர் வருகையில தான் வந்து எண்கள் வந்து வரி வடிவம் பெற்றுச்சு அப்ப அதுக்கப்புறம் எகிப்தியர்கள் வந்தாங்க எகிப்தியர்ல ஹைராடிக் முறை கொண்டு வந்தாங்க ரீசன்ட்டா இப்ப பிரேசில் இருந்து அவங்க பழங்குடியின மக்கள் வந்து வாழ்ந்துட்டு இருக்காங்க அவங்கள்ட்ட போயிட்டு எண்கள் பத்தி நீங்க என்ன எப்படி எண்ணுறீங்க அப்படின்னு கேட்கும்பொழுது அவங்க ஒன்னிலிருந்து எட்டு வரைக்கும் தான் அவங்களுக்கு எண்ண முடியுது

 அதுக்கப்புறம் ஒன்பது பத்து அப்படின்றது அவங்களுக்கு தெரியல அப்போ எட்டு முடிச்சதுக்கு அப்புறமா அடுத்த எட்டு நண்பர் நம்பரை வந்து எப்படி அவங்க சொல்றாங்க அப்படின்னா இரண்டாம் எட்டு இரண்டாம் மூன்றாம் எட்டு நான்காம் எட்டு அப்படின்னு சொல்லி எட்ட முறையா வச்சுக்கிட்டு

 அடுத்த அடுத்த எண்களை வந்து அவங்க அப்படித்தான் எண்ணி பழகுறாங்க இப்ப அப்புறம் பார்த்தீங்கன்னா அந்தந்த காலகட்டத்துல ஒரு ஒரு சமூக மக்கள் வந்து ஒரு விதமான அந்த வரி வடிவத்தை வச்சுக்கிட்டு அவங்க வந்து எழுத்துக்களை கணிதமா மாத்துனாங்க கடைசியா 

அதுக்கப்புறம் ஐரோப்பியர்களுடைய வருகைக்கு அப்புறம் இந்தியாவுலதான் அந்த ஒன்னு ரெண்டு மூன்று அப்படின்ற இப்ப உலகமே பயன்படுத்தக்கூடிய எண்கள் வந்து வந்துச்சு அப்படின்னு சொல்லலாம் ஓகே மேம் இப்ப மேக்ஸ் அப்படினாலே எல்லாருக்குமே ரொம்ப பயங்கரமான சப்ஜெக்ட் பெரிய பிரச்சனை அப்படின்னு நினைப்பாங்க இல்ல சோ இந்த மாதிரி மேக்ஸ் ரொம்ப கஷ்டம்னு நினைக்கக்கூடிய மாணவர்களுக்கு நீங்க சொல்லக்கூடிய விஷயங்கள் என்ன இப்ப மேக்ஸ் வந்து ரொம்ப கஷ்டம் அப்படின்னு முதல்ல எண்ணறதே தப்புன்னு தான் நான் நினைக்கிறேன் 

ஏன்னா சின்ன வயசுல இருந்தே மாணவர்களுக்கு இந்த கணித ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் பொழுது என்ன சொல்லிடுறாங்க அப்படின்னா இது ரொம்ப கஷ்டம் இதை கொஞ்சம் கவனமா செய் அவங்க சொல்ல வந்த விஷயம் கவனமா செய்யுங்க அப்படின்னு சொல்ல வந்தது ஆனா அதை எப்படி மாணவர்கள் புரிஞ்சுகிட்டாங்கன்னா இது கஷ்டம் இது கஷ்டம்னு அவங்களை அறியாமலேயே அவங்களுடைய மனதுக்குள்ள போய் அது அப்படியே பதிஞ்சிருச்சு 

ஆனா இந்த கணிதத்தை மட்டும் சரியா நம்ம புரிஞ்சுக்கிட்டோம் அப்படின்னா இதுபோல நமக்கு உதவக்கூடிய நண்பன் யாருமே கிடையாது ஏன்னா கணிதம் எப்பொழுதுமே புரிதல் புரிந்து கொள்ளுதல் அப்படின்ற பண்போட தொடர்புடையது இப்ப நம்ம வந்து பக்கத்துல உள்ளவங்களை நம்ம எப்படி புரிஞ்சுக்கிறோம் 

அந்த புரிஞ்சுக்கிறதை பொறுத்து தான் அவங்கள்ட்ட நம்ம வச்சிருக்கிற பழக்கங்கள் நம்ம இன்னும் தொடரலாமா இல்ல உடனே நம்ம அதை முறிச்சுக்கலாமா அப்படின்றது நமக்கு தோணும் அப்ப ஒரு மனுஷனை எப்படி புரிஞ்சுக்கிறோமோ அதுபோல நம்ம கணிதத்தை நம்ம ரொம்ப தெளிவா நம்ம புரிஞ்சுக்கிட்டோம் 

அப்படின்னா அந்த கணிதம் வந்து ரொம்பவே எளிதா இருக்கும் அதனால கணிதம் வந்து கடினம் அப்படின்னு நீங்க நினைக்கிறதை காட்டிலும் இது எனக்கு தேவை இது என்னுடைய வாழ்க்கைக்கு ரொம்ப உதவக்கூடியது அப்படிங்கறத அந்த மாணவர்கள் புரிஞ்சுகிட்டாங்க அப்படின்னா அவங்களுக்கு வந்து ரொம்ப ஈசியா இருக்கும் சரி எப்ப புரிஞ்சுக்கலாம் மாணவர்கள் எப்ப புரிஞ்சுக்கலாம் அப்படின்னா அவங்களுக்கு ஆர்வம் இருக்கும் பொழுது அது புரிதல் தானா வரும் 

அப்போ ஒரு கணிதம் அப்படின்னு சொல்லும் பொழுது இது எனக்கு இதன் மேல எனக்கு ஆர்வம் இருக்கு அப்படின்னு சொல்லும் பொழுது ஆர்வம் கவனத்தை உண்டாக்கும் கவனம் புரிஞ்சுக்கொள்ள வைக்கும் அப்போ ஒரு விஷயத்தை நம்ம புரிஞ்சுட்டோம் அப்படின்னா அது நம்ம மனசுல பதிய ஆரம்பிக்கும் அது பதிய ஆரம்பிக்கும் பொழுது அது நமக்கு பழக்கமாவே வந்துரும் அப்போ பழக்கம் ஒரு விஷயத்துக்கு நம்ம பயப்பட வேண்டிய அவசியமுமே இல்லை 

நம்ம சந்தேகப்பட வேண்டியதும் இல்ல நம்ம வெறுப்பை கொட்ட வேண்டிய அவசியமும் இல்லை சோ இந்த வழிமுறைகளை நம்ம பின்பற்றினோம் அப்படின்னா நமக்கு மேக்ஸ் ரொம்ப ஈசியா இருக்கும் சோ நீங்க கொஞ்சம் மேக்ஸ்ஸ புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க ஏன்னா ஆறாம் வகுப்புல ஒரு மாணவன் ஏதோ ஒரு பாடத்துல அவன் கடினமா இருக்கு அப்படின்னு அவன் வந்து அதை பீல் பண்ணான் அப்படின்னா அதனுடைய ரிப்ளெக்ஷன் வந்து டென்த்ல வந்து அவனை ரொம்ப பாதிப்பு உள்ளாக்குது 

அப்ப பாதிப்பு அவன் அவன் என்ன பண்ணிடுறான்னா பயந்து போயிடுறான் உடனே எனக்கு மேக்ஸ் வராது உடனே டியூஷன் வைங்க அப்படின்னு சொல்லிட்டு மாணவர்கள் என்ன பண்றாங்கன்னா அவங்கள் மேலேயே அவங்க ரொம்ப பாரத்தை போட்டுக்குறாங்க சோ இது தேவையே இல்லாத விஷயம் சின்ன விஷயம் உங்க குடும்பத்துல உங்க அப்பாவை எப்படி புரிஞ்சு வச்சிருக்கீங்க உங்க அம்மாவை எப்படி புரிஞ்சு வச்சிருக்கீங்களோ 

அதேபோல கணிதத்தையும் நீங்க புரிஞ்சுகிட்டீங்க அப்படின்னா அது உங்களுக்கு ரொம்பவே உதவி செய்யும் உங்களுடைய உயிர் நண்பனாவே மாறும் 

இப்ப வந்து இந்த கணிதம் பத்தி இதுவரைக்கும் யாருக்குமே தெரியாத சில சுவாரசிய தகவல்கள் ஏதாவது இருந்தா எங்க கூட ஷேர் பண்ணிக்கோங்க இந்த கணிதத்துல பார்த்தீங்க அப்படின்னா அல்ஜிப்ரா இயற்கணிதம் அப்படின்னு சொல்லுவாங்க இந்த அல்ஜிப்ரால இருபடி சமன்பாடு அப்படின்றது எல்லாருக்கும் தெரியும் 

அந்த இருபடி சமன்பாட்டினுடைய பொது வடிவம் பார்த்தீங்கன்னா ax^2+bx+c அப்படின்னு சொல்லிட்டு அந்த அந்த = 0 அப்படின்ற அந்த சமன்பாடு இருக்கும் இந்த சமன்பாடு வச்சு நம்ம நம்மளுடைய வாழ்க்கையில எத்தனையோ அன்றாட வாழ்க்கையில நம்ம பயன்படுகிற நிறைய பயன்பாடுகள் இருக்கு இப்ப இன்றைக்கு எடுத்துக்கிட்டோம் அப்படின்னா நீங்க மாணவர்கள் எல்லாருமே கேம் விளையாடுவோம் அதுல ஆங்கிரி பேர்ட் அப்படின்ற கேம் எல்லாரும் விளையாண்டு இருப்போம் 

அப்ப அந்த ஆங்கிரி பேர்டு வந்து என்ன செய்வோம் என்னன்னா அதை ஒரு டார்கெட் பண்ணி ஒரு இடத்தை நம்ம வந்து என்ன செய்யணும் அதை அடிக்கணும் அப்படிங்கும் பொழுது அந்த இடத்துல பார்த்தீங்கன்னா ஒரு பரவளையம் உண்டாகும் இப்ப நீங்க அதை டார்கெட் பண்ணும் பொழுது இந்த இடத்துல இவ்வளவு போர்ஸ் கொடுத்தீங்கன்னா அந்த இடத்துல போய் அது கரெக்ட்டா அந்த டச் ஆகி அந்த கேம நம்ம வந்து சக்சஸ் பண்ணலாம்

 அப்படின்ற இந்த அந்த ஸ்டார்டிங் பாயிண்ட்ல இருந்து எண்டிங் பாயிண்ட் வரைக்கும் உள்ள இருக்கக்கூடிய அந்த பரவளையம் என்கிறது இந்த இருபடி சமன்பாட்டின் மூலமாக நம்ம ஈஸியா கண்டுபிடிக்கலாம் அதேபோல வாட்டர் பவுண்டைன் இருக்குது ஏதாவது ஒரு கார்டன்ல போறோம் நம்ம ஒரு வாட்டர் பவுண்டைன் வந்து பார்க்கிறோம் 

அது அழகா அந்த தண்ணி வந்து மேல எழும்பி கீழ வந்து ஊத்தும் இல்லையா அது அந்த அழகு அதை வந்து அமைக்கிறது இந்த இருபடி சமன்பாடை வச்சுதான் அமைக்கிறாங்க அதேபோல ரோலர் கோஸ்டர் போறோம் நம்ப அந்த ரோலர் கோஸ்டர் வந்து எப்படி வந்து அந்த மூவ் ஆகுது இது எல்லாமே ஒரு ஈவன் வந்து ஒரு கிரிக்கெட்ல வந்து ஒரு பால் எந்த பிச்சுல அடிச்சோம்னா எங்க ஸ்டெம்ப் அவுட் ஆகும் 

அப்படின்ற அந்த வளை வரை அந்த வளைஞ்சு வரக்கூடிய அந்த வலைவரை அதுக்கு வந்து ஒரு எறுபடி சமன்பாடு ரொம்பவே யூஸ் ஆகுதுன்னு சொல்லலாம் இன்னொரு விஷயம் எடுத்துக்கிறோம் அப்படின்னா இதுல முக்கோணவியல் என்ற ஒரு பாடம் இருக்கு அதுல பித்தாகரஸ் பித்தாகரஸ் வந்து கணிதத்துக்கு ஏற்றின ஒரு பெரிய பங்கு வந்து இந்த பித்தாகரஸ் தியரம் அதாவது ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் இதை பார்த்த உடனே பிள்ளைங்க தலை தெரிச்சு ஓடுவாங்க 

அந்த தேற்றத்தை பார்த்த உடனே ஓடிருவீங்க ஆனா இது எதுக்கு யூஸ் ஆகுது தெரியுங்களா நீங்க இங்கிருந்து நீங்க அந்த ஜிபிஎஸ் மூலமா உங்க வீடு எங்க இருக்குன்னு சேட்டிலைட்ல நீங்க பாக்குறீங்க உங்களுடைய டிஸ்டன்ஸ் எவ்வளவு இருக்குது நீங்க இங்கிருந்து உங்க தலைக்கு மேல ஒரு பிளைட் பறக்குதுன்னா 

அதனுடைய உயரம் எவ்வளவு இருக்குங்கறத நீங்க அளந்து பாக்குறதுக்கு இவ்வளவு விஷயங்களுக்கு அதாவது எவ்வளவு தூரத்துல இருக்கு எவ்வளவு உயரத்துல இருக்குது அப்படிங்கறத கண்டுபிடிக்கிறதுக்கு எல்லாம் இந்த செங்கோண முக்கோணத்தை வச்சு பயன்படுத்துற 

இந்த பித்தாகரஸ் தியரம் யூஸ் ஆகுது சோ இதுபோல நிறைய ரியல் லைஃப்ல வந்து மேத்தமேட்டிக்ஸ் வந்து நிறைய யூஸ் ஆகிட்டு இருக்குது நிகழ்த்தகவு எடுத்துக்கலாம் நிகழ்த்தகவுல நமக்கு கிடைக்கிற வாய்ப்புகள்ல எந்த வாய்ப்பு எந்த வாய்ப்பை பயன்படுத்தி எதை செய்யணும் அப்படின்றதெல்லாம் பயன்படுத்துறது இந்த மேக்ஸ்ஸ வச்சு நிறைய செய்யலாம் இதுவரையும் மேக்ஸ் பத்தி நிறைய விஷயங்கள் எல்லாருக்கும் பயன் தரக்கூடிய வகையிலயும் ஸ்பெஷலா மாணவர்களுக்காகவும் நிறைய விஷயம் ஷேர் பண்ணீங்க இப்ப பொதுவா 

அதிரை பண்பலை நேயர்களுக்கு நீங்க சொல்ல வரக்கூடிய விஷயங்கள் என்ன அதிரை பண்பலை நேயர்களுக்கு அப்படின்னா இவங்க செஞ்சுட்டு இருக்கிற விஷயம் வந்து இன்றைய காலகட்டத்துல இவங்களுடைய மோட்டோவே என்னன்னா நமது சமூகம் நமது நலன் தன்னுடைய நலனை மட்டும் பார்க்காம இவங்க சமூகத்தின் நலனை நோக்கி என்னைக்கு இவங்களுடைய பயணம் இருந்துச்சோ இவங்களுடைய எண்ணம் வந்து எப்படிப்பட்டது அப்படின்றத நீங்களே தெரிஞ்சுக்கலாம் சோ இந்த மாணவர்களுக்கு வந்து கணிதத்தை பத்தின இன்றைய கடினமான சூழல் அது வெறுப்பு பயம் இதனால ஒதுங்கி போறது இதனால படிக்காமலே சில மாணவர்கள் வந்து தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு 

இதெல்லாம் அவங்க யோசிச்சிருப்பாங்களோ என்னமோ தெரியல அதனால தேசிய கணித நாளை வந்து ஒரு இதை அந்த நேயர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் ஒரு ப்ரோக்ராமா செய்யணும்னு அவங்க நினைச்சிருக்காங்க இப்ப இத நான் இவங்களுடைய விஷயத்தை நான் எடுத்தேன்னா லாரா குட் பிரிட்ஜ் அப்படின்றவங்க வந்து ஒரு புக் எழுதி இருக்காங்க என்னன்னா ரெட் கார் தியரி அப்படின்னு சொல்லிட்டு ஒரு புக் எழுதி இருக்காங்க அதுல அவங்க சொல்ற விஷயம் என்ன அப்படின்னா ஏதாவது ஒரு விஷயத்தை நீங்க தேடுனீங்க அப்படின்னா அது உங்களுடைய தேடலே இந்த பிரபஞ்சம் கொண்டு வந்து உங்க கண்ணு முன்னாடி நிப்பாட்டும் அப்படின்றதுதான் அப்போ ஒரு மாணவனுக்கு எது வேணும் எது வேண்டாம் 

வாட் வி வான்ட் வாட் டோன்ட் வி வான்ட் இது ரெண்டும் அவனுக்கு தெரிஞ்சிருந்துச்சுன்னா அந்த தேடல் அவனுக்கு என்ன தேடுறானோ அதை கொண்டு வந்து அவன் கண்ணு முன்னாடி நிப்பாட்டும் இப்ப நீங்க ரோட்ல போகும் பொழுது நிறைய ரெட் கார்ட்ஸ் பார்த்திருப்பீங்க ஆனா அது மைண்டுக்குள்ள இருந்திருக்காது இப்ப நான் உங்கள்ட்ட கேட்கிறேன் நீங்க இன்னைக்கு ஏதாவது ரெட் கார்ட்ஸ் பார்த்தீங்களா அப்படின்னா நீங்க யோசிச்சு சொல்லுவீங்க 

ஆனா நீங்க ரோட்ல போகும் பொழுது எங்கேயாவது ரெட் கார்ட்ஸ் பார்த்தீங்கன்னா இம்மீடியட்டா உங்களுக்கு உங்களுடைய பார்வை அது மேல போகும் அப்போ அது போகும் பொழுதே உங்களுக்கு என்ன தோணும் அப்படின்னா நான் என்ன தேடுறேனோ அந்த பிரபஞ்சம் எனக்கு கொடுக்கும் அப்போ நான் கணிதத்தை கடினமா தேடுனேன்னா எனக்கு கணிதம் கடினமா தான் இருக்கும் நான் கணிதத்தை தேட தேட எனக்கு அது ஒரு புதையல் போல எனக்கு வரும் அப்படிங்கறத நீங்க இனிமே தெரிஞ்சுக்கலாம் சோ இனிமே நீங்க ரோட்ல ரெட் கார்ஸ பார்த்தீங்க


அப்படின்னா இந்த பிரபஞ்சம் எனக்கு அது கொடுக்கும் அப்படிங்கறத நீங்க அதை நினைச்சுக்கலாம் சோ இந்த இதுதான் வந்து இன்னைக்கு அதிரை அந்த நேயர்கள் வந்து தெரிஞ்சுக்க வேண்டியது சோ அந்த இந்த விஷயத்தை தான் ஒரு தேடல் வந்து இருக்கணும் அப்படிங்கிறதை இந்த நேயர்களுக்கு இவங்க மூலமா அது கிடைக்க செய்து இந்த நல்ல விஷயத்தை செஞ்ச அதிரை எப்எம் டீம் அவ்வளவு பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை சொல்றேன் 

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது அதிரை எப்எம் அதிரை எப்எம் 904 நமது சமூகம் நமது நலன்


மேலும் இந்திகழ்ச்சி பற்றிய கருத்துக்களை 7373776904 என்ற whatsapp number க்கு அனுப்பவும்.

Comments

Popular posts from this blog

இன்றைய காலத்தின் பிடியில் இளைஞர்கள் - National Youth Day _2025 (Jan 12)