இன்றைய காலத்தின் பிடியில் இளைஞர்கள் - National Youth Day _2025 (Jan 12)

 


தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் விழிப்புணர்வு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் ஆலோசகர் திரு. நஜ்முதீன் அவர்கள் 

Adirai FM 90.4
Adirai FM

இந்த வீடியோ  விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூறும் பொருட்டு ஜனவரி 12 அன்று இந்தியாவில் கொண்டாடப்படும் தேசிய இளைஞர் தினத்தைப் பற்றியது. இது சமூகத்தில் இளைஞர்களின் முக்கியத்துவத்தை விவாதித்து, இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்துகிறது. இது இளைஞர் வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் திரு. நஸமுதீனுடனான நேர்காணலையும் உள்ளடக்கியது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் மற்றும் அதை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விவாதிக்கிறது. இது இளைஞர்கள் சமூக ஊடகங்களின் ஆபத்துகளைப் பற்றி விழிப்புடன் இருந்து அதை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்த வீடியோ இளைஞர்கள் தங்கள் சமூகங்களில் செயல்வாய்ப்புடன், ஈடுபட்டு, உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அழைப்புடன் முடிவடைகிறது.

ஆர்ஜே பாஹிரா : 
                                            வாழ்த்துக்கள் நேயர்களே நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது அதிரை பண்பலை 904 நமது சமூகம் நமது நலன் நான் உங்க ஆர்ஜே பாஹிரா தேசிய இளைஞர்கள் தினத்துக்காக இன்னைக்கு  நம்ம நிகழ்ச்சியி இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ஒரு பார்வை அப்படின்ற ஒரு விழிப்புணர்வுக்காக நிகழ்ச்சியில இணைந்திருக்காங்க மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. நஜ்முதீன் அவர்கள்வாழ்த்துக்கள் சார் உங்களை பத்தி                    அறிமுகப்படுத்திக்கோங்க                 


திரு. நஜ்முதீன் : 
                        வாழ்த்துக்கள்  நான் நஜ்முதீன் 2007 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு  வழிகாட்டி நிகழ்ச்சிகள் அவ்வப்போது செய்து கொண்டு வருகிறேன் 2007 ஆம் ஆண்டு முதல் தர்மியத்துல் இஸ்லாமியா மதரசாவுடைய பொறுப்பாசிரியராகவும் பணிபுரிந்து வருகிறேன் அதேபோன்று 2007 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை காதர் மொயிதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அலுவலகப் பணியாளராகவும் பணிபுரிந்து வருகிறேன் அவ்வப்போது மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் பிரச்சனைகளை என்னால் முடிந்த அளவுக்கு அந்த மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சிகளும் வழிகாட்டியுடைய ஆலோசனையும் கொடுத்து வருகிறேன்     

ஆர்ஜே பாஹிரா 
                                    இப்போஃபர்ஸ்ட் இந்த தேசிய இளைஞர்கள் தினம் அப்படின்றது எதனால் அனுசரிக்கப்படுது?

திரு. நஜ்முதீன் : 
                           தேசிய இளைஞர் தினம் ஜனவரி 12 ஆம் தேதி ஆரம்பிக்கப்படுகிறது இது விவேகானந்தார் அவர்களுடைய பிறந்த தினத்தை வைத்து ஆரம்பிக்கப்படுகிறது அந்த விவேகானந்தார் மாணவர்களுக்கான பல எழுச்சி மிக உரைகளை நிகழ்த்தி இருக்கிறார் மாணவர்கள் சமூகத்தில் ஒரு முன்னெடுப்பான சமூகமாக வளர வேண்டும் வேண்டும் என்ற கண்ணோட்டத்திலும் மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற
கண்ணோட்டத்தில் பல பயணங்கள் மேற்கொண்டார் அதன் அடிப்படையில் தேசிய இளைஞர் தினம் ஜனவரி 12 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது 

ஆர்ஜே பாஹிரா:இளைஞர்கள் அப்படின்னு நம்ம யாரெல்லாம் சொல்லுவோம்?

 திரு. நஜ்முதீன் :
                                    இளைஞர்கள் அப்படின்னு சொன்னா 18 வயதிலிருந்து 40 வயது வரைக்கும் இளைஞர்கள் தான் 18 வயதிலிருந்து 40 வயது வரைக்கும் இளைஞர்கள் தான் அந்த இளைஞர்களை பார்த்தோம் என்றால் 1999 ஆம் ஆண்டு முதல் ஏறத்தால 2200 ஆண்டு வரைக்கும் பல இளைஞர்கள் நல்ல ஒரு முன்னேற்ற பாதைகள் சென்றார்கள் ஆனால் 2021 ஆம் ஆண்டு 371 மில்லியன் இளைஞர்களாக இருந்தார்கள் வருங்காலத்தில் எப்படியாக மாறும் என்றால் 2036 ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 345 மில்லியன் மட்டுமே இருப்பார்கள். இளைஞர்களுடைய அந்த பிறப்பு வீதம் குறைந்ததுனாலே முதியோர்களும் வல்லுனர்களும் கவலைப்படக்கூடிய இருக்கு ஒரு சிந்தனை என்னவென்றால் இளைஞர்கள் நம்ம சமுதாயத்தில் இல்லை என்றால் சாதனைகளை படைக்க முடியாது ஆகவே இந்த சமூகத்தில் மிக முக்கியமானவங்க இளைஞர்கள் தான் இளைஞர்கள் வந்தாதான் நம்ம சமூகத்தை முன்னெடுப்பான சரியான பாதையில் கொண்டு போகணும் என்று வல்லுனர்கள் அறிஞர்கள் எல்லோரும் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள் 

ஆர்ஜே பாஹிரா  
                                            இப்போ ஒரு சமூகத்தை முன்னேற்ற பாதையில கொண்டு
போகணும் அப்படின்னா இளைஞர்கள் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறாங்க அப்படின்னு சொல்லலாம் இப்படிப்பட்ட இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில் என்ன மாதிரியான சவால்களை சந்திக்கிறாங்க எதனால அதிகமா பாதிக்கப்படுறாங்க சார்
 
திரு. நஜ்முதீன் 
                                        மிக அருமையான கேள்வி இளைஞர்கள் சந்திக்கக்கூடிய சவால் அப்படின்னு பார்த்தீங்கன்னா இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாதான் ஏன்னா சோசியல் மீடியாக்கள்ல அதிகமான நன்மைகளும்
இருக்குது அதிகமான பாவங்களும் இருக்குது அந்த சோசியல் மீடியாவை இந்த இளைஞர்களுக்கு சரியான பாதையில் கொண்டு போயிட்டோம் என்றால் அந்த இளைஞர்கள் வீட்டிலிருந்தே அந்த மொபைல் மூலமாக சோசியல் மீடியா மூலமாக சமூகத்தில் நல்ல பயனளிப்பாங்க ஆனால் இன்றைய சமூகத்தில் இளைஞர்களுக்கு என்னன்னா சோசியல் மீடியா எடுத்துட்டோம் என்றால்
அதிகமான இளைஞர்கள் தவறான பாதைக்கு கொண்டுட்டு தான் போறாங்க கோயம்புத்தூரில் நடந்த ஒரு 10 கல்லூரிகள்ல ஒரு ஆய்வு செய்யப்பட்டது அந்த ஆய்வுகளை ஏறத்தாழ 71% ஆபாச காட்சிகளும் சோசியல் மீடியாக்கள்ல இந்த இளைஞர்கள் அந்த உள்ளக்க நுழைஞ்சதுனால சோசியல் மீடியாக்கள்ல போய்
அதை பயன்படுத்தி படுத்துறத அதன் காரணமாக என்ன செஞ்சுறாங்க என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறுது ஆக சோசியல் மீடியா
தேவைதான் அதை சரியாக முறைப்படுத்த வேண்டியது யார் என்றால் அது அரசாங்கமும் அது சோசியல் மீடியாக்கள் இருக்கக்கூடிய வல்லுனர்களைக் கொண்டு எதை இளைஞர் சமுதாயத்துக்கு நல்லதை கொடுத்தா நல்ல ஒரு
சமூகத்தை மேற்படுத்தனும்ங்கிற சிந்தனை இருந்துச்சுன்னா அவங்க கிட்ட என்ன செய்யணும் அப்படின்னா அந்த சோசியல் மீடியாக்கள்ல நல்லதை மட்டும் அந்த சமூகத்துக்கு வழிகாட்டணும் ஏன்னா ஒரு இளைஞர்களிடம் நீ செய்ய வேண்டாம் அப்படின்னா நிச்சயமா செய்வாங்க எப்படி செய்யணும் அந்த சோசியல் மீடியாக்கள் மூலமாக என்னென்ன பலன் அப்படிங்கறத அந்த
சமூகத்துக்கு சொல்லணும் நீ தவறான அந்த சோசியல் மீடியாவை பயன்படுத்தினா என்றால் நீ எவ்வளவான தவறான பாதைகள் எல்லாம் போவா
அப்படிங்கறத நல்ல அழகான முறையில ஆலோசனை கொடுத்தோம் என்றால் நிச்சயமாக இளைஞர்கள் நல்ல ஒரு சமூகத்துக்கு பயனளிக்கக்கூடிய
அந்த சோசியல் மீடியாவை நல்ல முறையில் பயன்படுத்துவாங்க 

ஆர்ஜே பாஹிரா
                            ஓகே சார் இப்போ இளைஞர்கள் இன்னைக்கு இருக்கிற காலகட்டத்துல இந்த விஷயத்துல எல்லாம் விழிப்புணர்வோடு இருக்கணும் அப்படின்னு நீங்க எதையெல்லாம் சொல்லுவீங்க 

 திரு. நஜ்முதீன் :    
                                       இளைஞர்களை பொறுத்தவரைக்கும் அளவுக்கு எப்படின்னா இன்றைய காலகட்டத்துல எத்தனை இளைஞர்கள் சாதனை படைச்சிருக்காங்க அந்த சாதனையாளர்களை பத்தி இளைஞர்களிடம் அவ்வப்போது சொல்லிக்கிட்டே இருக்கணும் அவங்க இந்த சாதனையாளராக இருந்தாங்க உதாரணமாக எடுத்துக்கொண்டோம் என்றால் ஜீவித்குமார் அப்படின்னு சொல்லிக்கிட்டு தேனி மாவட்டத்தை சார்ந்தவர் அந்த தேனி
மாவட்டத்தில் நீட் தேர்வுல 720க்கு ஏறத்தாழ 664 மார்க்குள் எடுத்து தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்தவர் இது மாதிரியான தகவல்களை அந்த இளைஞர்களிடம் சொல்லணும் இதை பார்ப்பா உன்னுடைய வயதை கடந்தவர்கள் தான் தன்னுடைய வயதில் இருந்தவர்கள் தான் இந்த
சமூகத்துக்காக எவ்வளவு பயனளித்திருக்கிறாங்க அதேபோல சூரிய
ராஜேந்திரன் என்று சொல்லக்கூடியவங்க சூரிய ராஜேந்திரன் என்று சொல்லக்கூடியவங்க இங்க இந்தியாவிலே இளம் மேயர் ஏறத்தால் உங்களுடைய வயது எடுத்துக்கிட்டோம் என்றால் 21 வயதுன்னு சொல்றாங்க 19 வயதுன்னு கூட சொல்றாங்க அந்த இந்த இளம் மேயராக இருக்கக்கூடியவர் அவரு கண்டுகொண்டார் அதேபோல முகமது ஆஷிக்கு ரஹ்மான் என்று
சொல்லக்கூடிய கொரோனா காலத்துல இந்த கொரோனா காலத்துல மக்கள் எல்லாம் எவ்வளவு பீதியில் இருந்தாங்க மக்கள் எல்லாம் எவ்வளவு அச்சத்தில் இருந்தாங்க அந்த அச்சமான காலகட்டத்துல அந்த கொரோனால அந்த வீடுகளுக்கு மருந்துகளும் உணவுகளும் ஒரு ரோபோட்டை ரெடி பண்ணார் அந்த ரோபட்டை ரெடி பண்ணி ரோபட் மூலமாக இந்த சமூகத்துக்கு இளைஞராக இருந்து ஒரு சமூகத்துக்கு வழிகாட்டினார் அதேபோல தான் உறவுகள் டிரஸ்ட் உடைய மிஸ்டர் ஹாலித் அவர்கள் உறவுகள் டிரஸ்ட் உடைய மிஸ்டர் ஹாலித் இந்த ஊரைச் சார்ந்தவர் அதிராம வண்டத்தை சார்ந்தவர்கள் தமிழகத்தில் மிகப் பிரசித்து பெற்றவராக கணக்கிட்டார் அவருடைய வயது எடுத்துக்கிட்டோம் என்றால் இளம் வயதுதான் இளம் வயதில் அவருடைய
நேரங்களையும் காலங்களையும் சரியாக முறையாக பயன்படுத்தி கொரோனா காலத்துல எத்தனையோ உயிர்களை அடக்கம் செய்யப்படக்கூடிய அந்த உறவுகள் டிரஸ்ட் வந்தாங்க இன்னைக்கும் பல சாதனைகளை பற்றுக்கொண்டே இருக்கிறார்கள் இது 
மாதிரியான அந்த இளம் சாதனையாளர்களுடைய அந்த வரலாற்றுடைய நிகழ்ச்சிகளை இளைஞர்களை கொண்டு ஏற்படுத்துறது அந்த இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டுதல் இருக்குது என்பதை இந்த இளைஞர்களுக்கு சொல்றது 

ஆர்ஜே பாஹிரா    
                                               ஓகே சார் இப்போ சமுதாயத்துக்கு என்ன செய்யணுமோ அதையெல்லாம் இளைஞர்கள் செய்யணும் அதே நேரத்துல சாதனையாளர்களாகவும் அவங்க உருவாகணும் இதை பத்தின உங்ககிட்ட
இருக்கணும்னு சொன்னீங்க இதைத்தாண்டி இளைஞர்கள் தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் அப்படின்னு நீங்க எதையெல்லாம் சொல்லுவீங்க சார்
 
திரு. நஜ்முதீன் 
                                         முக்கியமான தகவல் அப்படின்னா முதல்ல நல்லொழுக்கம் தேவை. இளைஞர்களிடம் நல்லொழுக்கம் தேவை அதேபோல முதியோர்களிடம் நல்லொழுக்கம் தேவை இன்று நல்லொழுக்கம் புத்தகத்துல வடிவில் தான் இருக்கிறதே தவிர நல்லொழுக்கம் என்பது செயல் வடிவில் இல்லை நல்லொழுக்கம் செயல் வடிவில் முதியோர்களிடம் இருந்துச்சு இளைஞர்களிடம் இருந்துச்சுன்னா நீங்க கேட்கக்கூடிய இந்த கேள்விக்கு சரியான போக்குல இளஞ்சலார்கள் நல்ல சமூகத்துக்கு பயனளிக்கக் கூடியவங்களாக இருப்பாங்க அந்த இளைஞர்கள் என்ன செய்வாங்க நல்லொழுக்கம் இல்லாததுனாலதான் தன்னுடைய பெற்றோர்களிடம் எப்படி நடக்கணும் என்று தெரியல ஆசிரியர்களிடம் எப்படி நடக்கணும் என்று தெரியல சக நண்பர்களிடம் எப்படி நடக்கணும் என்று தெரியல ஆக இன்றைக்கு தேவை மிக முக்கியமானது நல்லொழுக்கம் அது முதியோர்களிடம் இருக்க வேண்டும் ,ஆசிரியர்களிடம் இருக்க வேண்டும், இளைஞர்களிடம் இருக்க வேண்டும் அதற்காக அவ்வப்போது அந்த இளைஞர்களை கொண்டு நல்லொழுக்கம் தொடர்பான ஒரு வழிகாட்டுதல் 
நிகழ்ச்சிகளை ஏற்படுத்துறது ஓகே சார் இப்ப வந்து இளைஞர்கள் தான் சமூகத்தை வழிநடத்தணும் அவங்க ஒரு முன்னேற்ற பாதையில கொண்டுட்டு போகணும் இந்த மாதிரி நிறைய விஷயங்கள் சொல்றீங்க இல்ல இளைஞர்கள்
நினைச்சா என்ன மாதிரியான மாற்றங்களை உங்களால கொண்டு வர முடியும் சரியான விஷயம் இளைஞர்களை எப்படி சரியான போக்குல கொண்டு போகணும் என்றால் இன்றைய தினம் ஜனவரி 12 ஆம் தேதி இன்றைய தினம் பார்த்தோம் என்றால் விவேகானந்தாருடைய பிறந்த தினம் அந்த விவேகானந்தார் என்ன சொன்னார் தெரியுங்களா என்னிடத்தில் 100 இளைஞர்களை தாருங்கள் நான் உலகத்தை மாற்றித் தருகிறேன் என்று சொன்னார் ஒரு 100 இளைஞர்கள் ஒரே கண்ணோட்டத்தில் ஒரே அவங்களுடைய சிந்தனை இருந்துச்சுன்னா நிச்சயமா மாற்றத்தை ஏற்படுத்த முடியும் அதேபோன்றுதான் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் என்ன சொன்னார் கனவு காணுங்கள்ன்னு சொன்னார் யாரிடத்தில் சொன்னார் முதியோர்களிடம் சொல்லவில்லை வயதார்களிடம் சொல்லவில்லை இளைஞர்களிடம் தான் சொன்னார் ஏன் நீங்கள் கனவு காணுங்கள் கனவு காணினால் நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் இலக்கை அடைந்து கொள்வீர்கள் என்று சொன்னார் அதே போன்றுதான் காமராஜர் முதலமைச்சராக இருந்தார் அந்த காமராஜர் என்ன செய்தார் அவருடைய சாதனைகள் எல்லாம் இன்று இளைஞர்களுக்கு தெரியவில்லை காமராஜர் செய்த சாதனைகள் பள்ளிக்கூடங்களை திறந்தார்
உணவே இல்லாத எத்தனையோ குடும்பங்களுக்கு உணவை கொடுத்து கல்வியை கொடுத்தார் அதுமட்டுமல்ல ஒரு மருத்துவ கல்லூரிக்காக தன்னுடைய விண்ணப்பத்தை அப்ளிகேஷனை மாணவர்கள் கொடுத்தார்கள் அதை எந்த மாணவர்களை தேர்வு செய்து என்று அவங்களுக்காக ஒரு குழப்பம் ஏற்பட்டுச்சு அப்ப காமராஜர் என்ன சொன்னார் எந்த அப்ளிகேஷனில் எந்த அப்ளிகேஷனில் கைரேகிம் பொதிக்கப்பட்டிருக்கிறதோ கைரேகை பதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த அப்ளிகேஷனுக்கு அந்த மருத்துவ கல்லூரிக்கு
முதலிடம் கொடுங்கள் என்று அங்கே கொடுத்தார் ஏனென்றால் படிப்பறிவுக்கு படிப்பறிவு இந்த சமூகத்துக்கு இளைஞர்களுக்கு தேவை கல்வி தேவை என்றால் குடும்பங்கள் ஏழ்மையும் அதற்கு அவர்கள் கல்வியை சரியாக முறையாக கொடுத்தால் அந்த குடும்பமும் சரியாகும் ஒரு சமூகம் சரியாகும் என்று சொன்னார்கள் இதே போன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களும் சொன்னார்கள் இளைஞர் உடைய சிறப்புகளைப் பற்றி சொன்னார்கள் சொன்னார்கள் நீங்கள் உங்களுக்கு நோய் வருவதற்கு முன்பு இளமையை தேடிக் கொள்ளுங்கள் வறுமை வருவதற்கு முன்பு ஏழ்மையை தேடிக் கொள்ளுங்கள் உங்களுக்கு நிச்சயமாக முதுமை வரும் முதுமை வருவதற்கு முன்பு இளைய சமுதாயமே இளமையை
நீங்கள் சரியான முறையில் பயன்படுத்துங்கள் என்று சொன்னார்கள் நோய் வரும் நோய் வருவதற்கு முன்பு சுகமாக இருக்கும்போது நல்லதை பயன்படுத்துங்கள் என்று சொன்னார்கள் ஓய்வு வரும் ஓய்வு வருவதற்கு முன்பு நேரத்தை நல்ல முறையில் செலவு செய்து கொள்ளுங்கள் அதேபோன்று உங்களுக்கு என்று ஒரு மரணம் உண்டு அந்த மரணம் வருவதற்கு முன்பு வாழ்க்கையை சரி செய்து கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் என்றால் ஒவ்வொரு இளைஞன் எப்படி செயல்படுத்த வேண்டும் என்று நம்முடைய தலைவர்களும் நம்முடைய வல்லுனர்களும் ஆய்வாளர்களும் சிறப்பாக அழகாக சொல்லி இருக்கிறார்கள்  

ஆர்ஜே பாஹிரா
                                          இன்றைய காலகட்டத்தில் இளைஞருக்கு இளைஞர்களுக்கு கூட உளவியல் ஆலோசனை ரொம்ப அதிகமா தேவைப்படுது அப்போ இளைஞர்கள் உளவியல் ரீதியா அதிகமா பாதிப்பு அடையறதுக்கான காரணம் என்னவா இருக்கு அதை எப்படி சரி செய்யலாம்?

 திரு. நஜ்முதீன் : 
                                உளவியல் சார்ந்த படிப்பை நான் படித்துக் கொண்டு வருகிறேன் அதன் காரணமாக இந்த ஊரில் ஏறத்தாழ 30க்கு மேற்பட்ட மாணவர்களை செய்து ஆய்வு செய்தேன் அது ஒன்பதாம் வகுப்பிலிருந்து படிக்கக்கூடிய மாணவர்கள் முதல் கல்லூரி வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அவர்களை ஒவ்வொரு நபர்களாக நான் சேர்ந்து உனக்கு படிக்கிற காலத்துல
என்னென்ன பிரச்சனைகள் உனக்கு ஏற்படக்கூடிய என்னென்ன என்ன இன்னல்கள் சிரமங்கள் இருக்கு என்று சொன்னோம் என்றால் அவர்கள்
பட்டியிட்டே கொண்டு போகிறார்கள் முதலாவது சொன்னார்கள் நிம்மதியான தூக்கம் இல்லை என்று சொல்கிறார்கள் இன்னைக்கு பார்த்தோம் என்றால் ஒரு மனிதனுக்கு ஏழு மணி நேரம் தூக்கம் தேவை ஆனால் இன்று ஒன்பதாம் 
வகுப்பிலிருந்து அவர் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய காலங்களில் அவரு அவருக்கு கோச்சிங் கிளாஸ் சிறப்பு வகுப்பு டியூஷன் அப்படி என்று சொல்லி சொல்லி அவருடைய தூக்கம் இல்லாமல் போய்விடுகிறது அடுத்து சொல்கிறார்கள் அரவணைக்கக்கூடிய ஆதரவாளர்கள் இல்லை எப்போதுமே எங்களை என்ன செய்றாங்க இளைஞர்கள் என்ன செய்றாங்க ஒரு குறை சொல்லிக்கிட்டே தான் இருக்கிறாரே தவிர எங்களுடைய நாங்கள் எவ்வளவு நல்ல காரியம் செய்கிறோம் எங்களை ஊக்கவிப்பதற்கான பெற்றோர்களும் தயாராக இல்லை முதியோர்களும் தயாராக இல்லை ஆசிரியர்களும் தயார் இல்லை என்று சொல்றாங்க அடுத்து சொல்றாங்க பாகுபாடுபார்க்கிறாங்க நல்ல மதிப்பை எடுத்தா அதுக்கான ஒரு பிள்ளையை நல்ல ஒரு நிலையை
ஏற்படுத்துறது அவங்களுக்காக அன்பளிப்புகளை கொடுக்கிறது அதே மட்டும் இல்ல மதிப்பெண் இல்லை ஒரு மார்க் இல்லை ஏதோ ஒரு ஃபைல் ஆயிட்டான்னா அவனுடைய பார்வை பார்க்கிறது ஏதோ இவரு ஒரு அகப்பார்வையாக ஒரு கோபப் பார்வையாக பாக்குறாங்க என்று சொல்றாங்க
அடுத்தது என்னன்னா எங்களுக்கு மத்தியில வாக்குவாதம் செய்றாங்க கணவன் மனைவி பிரச்சனைகளை எங்களுக்கு மத்தியில வாக்குவாதம் செய்றாங்க இது எங்க மனரீதியில பாதிக்கப்பட்டு நாங்க கல்விக்கு கூடங்கள்ல ஸ்கூல்கள்ல போனாலும் சரி காலேஜ்ல போனாலும் சரி எங்களுடைய அந்த படிப்பை தொடர முடியாம நாங்க என்ன டிராப் அவுட் ஆயிடுறோம் அடுத்தது அவர்கள் சொன்னார்கள் இன்னைக்கு முக்கியமான விஷயம் எங்களுக்கு சிறந்த நண்பர்கள் இல்லை பாருங்க நமக்கு நல்ல நண்பர்களாக இருக்கணும்னு ஆசைப்படுறோம் அந்த நண்பன் எங்க இல்லை கல்லூரியிலயும் இல்லை வகுப்புகள்ல பார்த்தோம் என்றால் அந்த நம்மளுக்கு தோதுவான நம்ம எந்த நிலை நல்லவனா ஆகணும்னு ஆசைப்படுறோம் நம்ம
கிளாஸ் ரூம்ல பார்த்தோம்னா பலபேர் போதைக்கு அகப்பட்டுக் கொண்டவனா இருக்கிறான் போதையிலே அடிமையாக இருக்கக்கூடியவனா சோசியல் மீடியாவிலே அடிமையா உள்ளவனா இருக்கிறான் இவனுடைய
செயல்பாடுகள் என்ன பார்த்தோம்னா எல்லாமே மாற்றமா இருக்குது அதே மாதிரி கலாச்சார சீர்கேடுகள் அதனுடைய செயல்பாடுகளை பார்த்தோம் என்றால் ஒரு பென்ச்ல ஒரே ஒரே கிளாஸ் ரூம்ல இருக்கிறோம் அவரை பார்த்தோம் என்றால் நான் நல்லவனா இருக்கணும்னு ஆசைப்படுறேன் ஆனா என் சுத்தி இருக்கக்கூடியவங்க யாரும் இல்லை சரியானவர்கள் இருக்கிறேன் அடுத்து சொல்றாங்க மொபைல் மொபைல் மொபைல் என்று சொல்லி சொல்லியே என்ன சொல்றாங்க நீ மொபைல் பார்க்காத மொபைல் பார்க்காத மொபைல் பார்க்காத ஆனா அவங்க பல மணி நேரங்கள் எங்களுக்கு முன்னாடி மொபைல்ல பல சீரியல் பார்க்கிறாங்க டிவில பல சீரியல் பார்க்கிறாங்க மொபைலை எப்படி பயன்படுத்தி எடுத்து சொல்லித்தாங்க நாங்க பயன்படுத்துறோம் அப்படின்னு சொல்றாங்க அடுத்த மாணவர்கள் சொல்றாங்க என்னன்னா மிக முக்கியமானது எங்களுக்கு காலை உணவுங்கிறது இல்லை 30 மாணவர்கள்ல ஏறத்தாழ 20க்கு மேற்பட்ட மாணவர்களுடைய அந்த அறிக்கை அவங்க சொன்ன விஷயம் என்றால் எங்களுடைய காலை உணவு வீடுகள்ல இல்லை எங்களுக்கு என்ன செய்றாங்க
ஒரு பிஸ்கட் பாக்கெட் ஒரு டீயை கொடுத்துபுட்டு ஸ்கூலுக்கு போ கல்லூரிக்கு
போ என்று சொல்றாங்க ஆனா காலை உணவு இல்லை அடுத்தது பார்த்தோம் என்றால் தந்தை பெரும்பாலான தந்தை வெளிநாட்டில் இருக்கிறான் ஒரு முடிவு எடுக்க முடியல ஒரு ஏதோ ஒரு காரியங்களை முடிவெடுக்கணும் என்றால் என்ன செய்றாங்க இவர்தான் இருக்கிறார் டென்த் படிக்கிறாரு டென்த் படிச்சுக்கிட்டு அவருடைய வாப்பா எங்க அப்படின்னா வெளிநாட்டுல இருக்கிறார் வெளிநாட்டுல இருக்க போகும்போது வீடுகள்ல பார்த்தோம் என்றால் என்ன செய்ய முடியுது இவரு இவரான சில வீடுகள்ல இருக்க போகும்போது படிக்கிறதுக்கான நேரத்தை கொடுக்க முடியல அதான வீட்டு வேலையும் பார்க்கணும் வீட்ல இருக்கக்கூடிய வேலைகளையும் பார்க்கணும் இப்படியாக தந்தை வெளிநாடுகள்ல இருக்கும்போது தந்தை வெளியூர்கள்ல இருக்க போகும்போது எங்களுடைய இந்த கல்லூரிகள் அதை தொடர முடியல படிப்பை தொடர முடியல அடுத்தது மிக முக்கியமா சொல்லக்கூடியதுனா எங்களுக்கான பிளே கிரவுண்ட் இல்லைங்கிறாங்க பிளே கிரவுண்டுக்கு விளையாடக்கூடிய நேரமும் இல்லை பிளே கிரவுண்டும் இல்லை இதனால நாங்க என்ன செஞ்சுறோம் எங்களுடைய சக நண்பர்கள் எல்லாம் மொபைல்ல விளையாடுறாங்க நாங்களும் சில நேரத்துல அந்த விளையாடக்கூடிய சூழ்நிலைகள் வருது அப்படின்னு அதிகமான ஏறத்தாழ 30க்கு மேற்பட்ட மாணவர்களிடம் ஆய்வறிக்கையில இது போன்ற இன்னும் எத்தனையோ 
சொன்னாங்க ஆனா நேரம் போதாத காரணத்தினால நான் சுருக்கிக் கொள்கிறேன் 
ஆர்ஜே பாஹிரா
                                    ஓகே சார் இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில் விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில இந்த இந்த விஷயத்துல எல்லாம் ரொம்ப கம்மியா இருக்கு அப்படின்னு எதை சொல்றீங்க சார்?

திரு. நஜ்முதீன் :    
                                    முதல்ல பெற்றோர்களுடைய மரியாதை இல்லை பெற்றோர்கள் நம்மளுக்கு நம்மள சொல்லக்கூடிய விஷயம் நம்ம நல்லது தான்
சொல்றாங்க அப்படிங்கிற விஷயம் ஏன்னா என்ன இந்த இளைஞர்களிடம் இல்லை எதை சொன்னாலும் அதை பெற்றோர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை எதிரி பார்க்கிற மாதிரி பார்க்கிறாங்க அதுல ரெண்டு நிலை ஒன்னு பெற்றோர்கள் எப்படி சொல்ல முறை பெற்றோருக்கும் தெரியல இரண்டாவது பெற்றோர்கள் சொல்லக்கூடிய விஷயம் நமது நலனுக்காகத்தான் சொல்றாங்க அப்படிங்கிற விஷயத்தை இந்த இளைஞர்கள் இல்லை அடுத்ததாக பெரும்பாலான இளைஞர்களை பார்த்தோம் என்றால்
வணக்க ஸ்தலங்களுக்கு போறதில்லை நீங்க வணக்க ஸ்தலங்களை பார்த்தோம் என்றால் ஒன்னு மூத்தவர்களாக இருக்கிறாங்க இல்லாட்டி சிறியவர்களாக சிறுவர்களாக இருக்கிறாங்க ஒன்னு 10 வயசுக்கு கீழ உள்ளவங்களா இருக்குறாங்க இல்ல 50 வயசுக்கு மேல உள்ளவங்களா இருக்காங்க இந்த இடைப்பட்ட இளைஞர்கள் வணக்க ஸ்தலங்களுக்கு போறாங்களா அப்படின்னா எல்லா மதத்தில் உள்ளவர்களுடைய மூத்தோர்கள்ல எல்லாருடைய ஆதங்கம் என்ன வணக்க ஸ்தலங்களை விட்டு
தூரமாயிட்டாங்க அது சர்ச்சாக இருக்கலாம் அது கோயிலாக இருக்கலாம் அது மஸ்ஜிதாக பள்ளிவாசலாக இருக்கலாம் இந்த இளைஞர்கள் வணக்க ஸ்தலங்களை விட்டு தூரமாகிட்டாங்க அடுத்தது என்னன்னா இவங்களுக்குன்னு கோல் பாயிண்ட் ஒரு இலக்கு இல்லாம பயணிக்கிறாங்க ஒரு இளைஞர்களிடம் நீ என்னவாக போற அப்படின்னு பார்த்தோம் என்றால் அவர் என்ன சொல்றாரு அப்படின்னா ஏதோ படிக்கிற ஏதோ படிக்கிற ஏதோ எங்கேயோ போகப்போறேன் ஆனா ஒரு கோல்ட் பாயிண்ட் என்னுடைய ஃபியூச்சர் பிளான் என்ன அப்படிங்கிறதை இளைஞர்கள் தெரியாததுனாலதான் இவங்களுடைய இழக்க போறாங்க அடுத்ததாக இவனுடைய குறிக்கோள் எதற்காக நான் படிக்கிறேன் மிக முக்கியமான ஒரு விஷயம் இளைஞர்கள் என்னன்னா தன்னுடைய பெற்றோர்களுடைய அந்த செல்வாக்கு என்ன அவங்களுக்கான சோர்ஸ் இருக்குதுங்கிறது தெரியாம செலவு செய்றாங்க உதாரணமா தந்தை வந்து மாதம் ஒரு ₹10000 தான் சம்பாதிக்கிறாங்க அப்படின்னா இவன் கேட்கிறது எப்படின்னா ₹20000 கேக்குறான் இவன் கேட்கிறது இந்த மாணவர் இந்த இளைஞர் என்ன கேட்கிறார் அப்படின்னு பார்த்தோம் என்றால் ஏன் ஒன்னேகால் லட்சம் ரூபாய்
ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை கேட்கிறார் இப்ப பைக் கேட்கும்போது அதற்கான நிலை அவர்ட்ட அவர் கேட்கக்கூடிய இந்த பைக் கேட்கக்கூடிய அளவுக்கு இவருடைய பணவசதி இல்லை மனம் உடைஞ்சு போயிடுறாரு இதனால இரண்டு பேர்களுக்கும் மனமுறிவு கணவன் மனைவிக்கு மனமுறிவு ஏற்படுது தந்தைக்கும்  மகனுக்கும் இதனால எதிரியாக பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு அதனால ஒவ்வொரு இளைஞர்களும் என்ன நினைக்கிறேன் என்னுடைய தந்தையுடைய என்ன சோர்ஸ் இருக்குது என்னுடைய தந்தையுடைய என்ன வருமானம் இருக்குது
அதுக்கு தகுந்த மாதிரி நம்முடைய வாழ்க்கையை அமைச்சுக்கொள்றது 

ஆர்ஜே பாஹிரா 
                                இதுவரையும் இந்த தேசிய இளைஞர்கள் தினத்தில் இளைஞர்களுக்கு தேவையான நிறைய நிறைய நல்ல விஷயங்களை எங்க கூட ஷேர் பண்ணிக்கிட்டீங்க இப்போ அதிரை பண்பலை நேயர்களுக்கு நீங்க சொல்ல வரக்கூடிய விஷயங்கள் என்ன 

திரு. நஜ்முதீன் 
                                        அந்த அதிரை எப்எம் அவங்களுக்கு கொடுக்க வேண்டிய மிக முக்கியமானது மாஷா அல்லாஹ் இறைவனுடைய பெரிய ஒரு அருளால் நல்ல ஒரு சேவை செஞ்சுகிட்டு இருக்காங்க ஒரு சமூக ஒரு மீடியா என்பது நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு மீடியா என்பது நல்லதை உடனே போகக்கூடிய ஒரு செயல்தான் மீடியா அதுலயும் இந்த அதிரை எப்எம் இருக்குதே தினசரி கேட்கக்கூடிய நானும் ஒரு நேயராக இருக்கிறேன் பல தகவல்கள் பல நல்ல விஷயங்கள் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முதியோர்களுக்கான வழிகாட்டுதல் அதே மாதிரி விவசாயிகளுக்கான வழிகாட்டுதல் இப்படியாக அவ்வப்போது என்னென்ன சிறப்பு தினம் இருக்குதோ அந்த நிகழ்ச்சிகள் நிறைய செய்றாங்க அவங்களுக்கு சொல்லக்கூடிய மிக முக்கியமான விஷயம் விஷயம் என்னவென்றால் இளைஞர்களை தன்னம்பிக்கை ஏற்படுத்துங்கள் உன்னால் முடியும் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் சொன்ன மாதிரி உன்னால் முடியும் நீ செய்ய முடியும் என்பதை தன்னம்பிக்கையை அவ்வப்போது பெற்றோர்களும் முதியோர்களும் அந்த துறை சார்ந்தவர்களும் அவ்வப்போது தன்னம்பிக்கை ஏற்படுத்துங்கள்
இரண்டாவது விஷயம் பொறுப்புகளை அவங்கள்ட்ட கொடுங்க நிச்சயமா பொறுப்புகளை கொடுத்தோம் என்றால் நல்லா செய்வாங்க இந்த அதிரை எப்எம் இருக்கக்கூடியவங்க நான் இரண்டாவது நிகழ்ச்சியாக இந்த நேர்காணல் நான் சேர்ந்து நான் பயணிக்கிறேன் இதுல செய்யக்கூடிய எல்லா பணிகளுமே இளைஞர்கள் தான் செய்றாங்க மிகப்பெரிய ஒரு ஒரு சாதனை 
செஞ்சு கொண்டிருக்கிறாங்க  அதற்காக நேரத்தை ஒதுக்கி ஒரு சமூகத்துக்கு ஒரு பயன் அளிக்கணும் என்பதற்காக தன்னுடைய நேரங்கள் எவ்வளவோ அவங்களுக்கான சோர்ஸ் இருக்குது ஆனால் ஒரு மீடியா ஒரு சமூகத்தில் மிக்க நல்ல ஒரு பலன் அளிக்கணும் என்ற கண்ணட்டத்தோட நேரம் பார்க்காம சம்பாதிப்பை நோக்கமாக ஆக்காம ஒரு சமூக சேவை என்கிற கண்ணோட்ட
இந்த பொறுப்புகளை அவங்கள்ட்ட கொடுத்தோம் என்றால் எப்படி ஒரு சக்சஸ்ஃபுல்லா கொண்டுட்டு போறாங்க இதே போல இளைஞர்களுக்கு நீங்க எல்லாம் பொறுப்புகளை கொடுங்க அந்த பொறுப்புகள் முதியோர்களோடு சேர்ந்து கொடுங்க முதியோர்களோட ஆலோசனை கொடுங்க முதியோர்கள் இளைஞர்களை மட்டும் தனியாக பிரித்து விட முடியாது முதியோர்களுடைய
ஆலோசனை கொடுக்கணும் முதியோர்களுடைய ஆலோசனை நீங்க வழங்குங்க அவங்களுடைய ஒத்துழைப்பு கொடுங்க அடுத்ததாக இளைஞர்களுக்காக நேரத்தை கொடுங்க ஒரு நேரம் மாதத்துல ஒரு நாள் மாதத்துல ஒரு நாள் உங்களுடைய கோரிக்கை என்ன நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் என்ன இது போன்ற நேரத்தை கொடுங்க அவர்களை நம்பி ஒப்படைங்க இப்ப பாருங்க இந்த அதிர் எப்எம் நம்பி ஒப்படைச்சிருக்காங்க இவங்களுடைய உரிமையாளர் இந்த இளைஞர்களிடம்
ஏறத்தாழ ஒரு ஆறு பேரோ ஏழு பேரோ எட்டு பேரோ 10 பேரோ பயணிக்கிறாங்க எந்த தொழில் இல்லாமல் எந்தெந்த நேரத்துல எந்தெந்த நிகழ்ச்சிகளை ஒரு சமூகத்துக்கு பயனளிக்குமோ சரியான நேரத்துல அதை கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறாங்க என்றால் நிச்சயமாக இளைஞர்களால பொறுப்புகளை கொடுங்க ஆலோசனை கொடுங்க நேரத்தை கொடுங்க அந்த சமூகம் நல்ல ஒரு சமூகமாக மாறும் எங்கே இளைஞர்களும் முதியோர்களும் ஒரே சிந்தனையோட ஒரே போக்குல சென்றோம் என்றால் 
அந்த இளைஞர்களும் நல்ல பயனளிப்பாங்க சமூகமும் நல்ல பயனளிக்கின்ற கருத்தை இங்கே பதிவு செய்கிறேன் 


Comments

Popular posts from this blog

கணிதமா... கடினமா... MATHEMATICS DAY | கணிதப் பட்டதாரி ஆசிரியை சுதா M.sc....