ADIRAI FM 90.4 BLOGGER
"குடியரசு தினம்"
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்பு சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று.12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக ஜனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் ஜனவரி 26-ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.
இது உங்கள் அதிரை பண்பலை 90.4
நமது சமூகம்... நமது நலன்....
Comments
Post a Comment