குழந்தையின்மையும்.... செயற்கை கருத்தரித்தலும் .... நேர்காணல்
Dr. Aeshika அவர்களுடன் ஓர் நேர்காணல் |
குழந்தையின்மையும்....
குழந்தையின்மையும்....
செயற்கை கருத்தரித்தலும் ....
RJ FAHIRA : வாழ்த்துக்கள் நேயர்களே நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது அதிரை பண்பலை 904 நமது சமூகம் நமது நலன் இன்னைக்கு நிகழ்ச்சியில செயற்கை கருத்தரிப்பு அப்புறம் குழந்தையின்மைக்கான நிறைய விஷயங்களை பத்தி நம்ம கூட ஷேர் பண்ண நிகழ்ச்சியில இணைந்திருக்காங்க மருத்துவர் ஏஷிகா அவர்கள் வாழ்த்துக்கள் மேம் உங்களை பத்தி அறிமுகப்படுத்திக்கோங்க
Dr. AESHIKA : அதிரை எப்எம் நேயர்களுக்கு வாழ்த்துக்கள் நான் டாக்டர் ஏஷிகா மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை நிபுணர் நான் இங்க பட்டுக்கோட்டையில செண்பகம் மருத்துவம் மனை அண்ட் ஜனனி பெர்டிலிட்டி சென்டர் இந்த இரண்டு இடங்களிலும் கன்சல்டன்ட்டா இருக்கேன்
RJ FAHIRA : ஓகே மேம் இன்னைக்கு இருக்க காலகட்டத்துல குழந்தையின்மை அதிகமா இருக்குறதுக்கான காரணம் என்னவா இருக்கும்.?
Dr. AESHIKA : இப்போ கரண்ட்லி இன்ஃபெர்டிலிட்டி நிறைய பேரை சொல்லிட்டு இருக்காங்க அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு அதுல முக்கியமான ஒரு சில விஷயங்கள் பார்த்தீங்கன்னா இப்போ நிறைய பேர் வந்து அவங்களோட ப்ரொபஷன்க்காக படிப்புக்காக அவங்க மேரேஜஸ் தள்ளி போடுறாங்க so திருமணம் செய்து கொள்ற ஏஜே வந்து லேட்டா இருக்கு அதை தாண்டி திருமணம் செய்த தம்பதிகளும் என்ன பண்றாங்கன்னா பினான்சியலி நம்ம ஸ்டேபிள் ஆகணும் அந்த மாதிரி சில ரீசன்ஸ்காக பிரெக்னன்சியை தள்ளி போடுறாங்க இது இப்போ இந்த காலகட்டத்துல அதிகமா நடக்குது
இதைத் தாண்டி சில விஷயங்கள் நம்மளோட பழக்க வழக்கங்கள் இப்ப நம்மளோட சில பேருக்கு இருக்க குடிப்பழக்கம் ஸ்மோக்கிங் உடல் பயிற்சி சுத்தமா இல்லாம இருக்கிற நிறைய ஓவர் வெயிட் இப்ப பார்க்கிறோம் அது இல்லாம பார்த்தீங்கன்னா தூக்கமின்மை இது ஒரு பெரிய பிரச்சனையா இருக்கு இதெல்லாம் தாண்டி நிறைய ஸ்ட்ரெஸ் ஃபேக்டர்ஸ் சின்ன சின்ன விஷயங்களுக்கும் மன அழுத்தம் இப்ப ஒரு எல் கேஜி பிள்ளையில இருந்து பெரியவங்க வரைக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் நம்ம ஸ்ட்ரெஸ் ஸ்ட்ரெஸ்ன்னு சொல்லிடுறோம் சோ இதெல்லாம் கூட காரணங்களா இருக்கலாம்
இதுக்கு அடுத்தபடி பார்த்தோம்னா நம்மளோட ஃபுட் ஹாபிட்ஸ்ன்னு எடுத்துக்கிட்டோம்னா நிறைய ஜங்க் ஃபுட்ஸ் இப்போ பீட்சா பர்கர் இந்த மாதிரி விஷயங்கள் நிறைய பயன்படுத்துறோம் அது இல்லாம நிறைய ரெடிமேட் ஃபுட்ஸ் ப்ராசஸ் ஃபுட்ஸ் பிரிசர்வேட்டிவ்ஸ் ஆட் பண்ற ஃபுட்ஸ் இந்த மாதிரி விஷயங்களை நம்ம அதிகமா எடுத்துக்கிறோம் இந்த மாதிரி விஷயங்கள் எடுத்துக் கொள்ளும்போது கூட சம்டைம்ஸ் நம்மளோட பெர்டிலிட்டி அதை அபெக்ட் பண்ணுது இதை தாண்டி வேற விஷயங்கள் என்னென்னன்னு பார்த்தீங்கன்னா சில பேரோட ஆக்குபேஷனே அந்த மாதிரி இருக்கலாம் இப்ப நான் நார்மலா இப்ப ஜென்ட்ஸ் எல்லாம் பார்த்தீங்கன்னா இந்த சூடா என்விரான்மென்ட்ல வேலை பாக்குறாங்க சப்போஸ் ஒரு ஹோட்டல்ல குக்கா இருக்குறவங்க இல்ல ஒரு பேக்கரில வேலை பார்க்கிறவங்க இந்த மாதிரி இருக்குறவங்களுக்கு விந்தணு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு
இது இல்லாம கெமிக்கல் எக்ஸ்போசர் ஒரு கெமிக்கல் ஃபேக்டரில வேலை பார்க்கிறவங்க இல்ல பெயிண்டர்ஸ் இந்த மாதிரி ஆக்குபேஷனோட ரிஸ்க் பெர்டிலிட்டியை இம்பேர் பண்ணுது இது இல்லாம இப்போ நம்ம எடுத்துக்கிட்டோம்னா இந்த கால் சென்டர் ஐடி ப்ரொபஷனல்ஸ் நிறைய பேர் இருக்காங்க இவங்களுக்கெல்லாம் என்ன ஆகுது அப்படின்னு பார்த்தீங்கன்னா பொழுதுன்னைக்கு ஒரு மார்னிங் டைம்ல இருந்து நைட் வரைக்கும் நம்ம அந்த கம்ப்யூட்டர் முன்னாடி உட்காருறது சோ இந்த கம்ப்யூட்டர்ல இருந்து வர அந்த ரேடியேஷன் எலக்ட்ரோ மேக்னெட்டிக் வேவ்ஸ் கூட பெர்டிலிட்டி அபெக்ட் பண்றதுன்னு சொல்றாங்க சோ ஓவர் யூஸ் ஆஃப் எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் இந்த மொபைல்ல ரொம்ப அதிகமா பார்க்கிறது இதெல்லாம் கூட ஒரு ரீசனா அமையுது இதெல்லாம் தாண்டி முக்கியமா ஒரு பெர்டிலிட்டி நம்ம எடுத்துக்கிட்டாலே ஒரு அந்த ஃபீமேலோட ஏஜ் வந்து ரொம்ப முக்கியமா இருக்கு
SO இந்த மெயின்லி வந்து அந்த காலத்துல சீக்கிரமா நம்ம வந்து கரெக்டான ஏஜ்ல கல்யாணம் பண்ணிருவாங்க என் கரெக்டான ஏஜ் காட்டிலும் முன்னாடியே கல்யாணம் பண்ணிருவாங்க சோ குழந்தையின்மைன்றது ஒரு பெரிய பிரச்சனையா இருந்தது கிடையாது இப்போ நிறைய லேட் மேரேஜஸ் அண்ட் ஏஜ் 30 32 இந்த மாதிரிதான் வந்து கல்யாணமே பண்றாங்க சோ இதனால மே பி இப்போ இந்த காலத்துல அதிகமா இருக்குன்னு சொல்லலாம்.
RJ FAHIRA : ஓகே மேம் இப்போ குழந்தை இன்மைக்கு எப்போ ட்ரீட்மென்ட் எடுக்க ஸ்டார்ட் பண்ணனும்.?
Dr. AESHIKA : இப்ப நம்ம ஹாஸ்பிடல்ல டே டு டே பேஷன்ட்ஸ் வர்றத பார்த்தீங்கன்னா ரெண்டு எக்ஸ்ட்ரீம்ஸா வராங்க ஒரு சில பேருக்கு கல்யாணம் ஆனா அடுத்த மாசமே இல்ல ரெண்டு மாசம் மூணு மாசத்துல ட்ரீட்மென்ட் வேணும்னு வராங்க இன்னொரு சில பேர் எல்லாம் இருக்கறவங்க நாலு வருஷம் அஞ்சு வருஷம் கழிச்சுதான் ட்ரீட்மென்ட்க்கு வராங்க சோ இது ரெண்டுமே தப்பான விஷயங்கள் இதுக்கு கரெக்டான ட்ரீட்மென்ட் எப்படி எப்ப எடுக்கணும் அப்படின்னு பார்த்தீங்கன்னா கல்யாணம் ஆன தம்பதிகள் ஒரு வருட காலமாக ரெகுலர் ரிலேஷன்ஷிப் எந்த ஒரு கருத்தடையும் பயன்படுத்தாம ட்ரைப் பண்ணி ஒரு வருஷ காலம் தாண்டியும் கன்சீவ் ஆகல அப்படின்னாதான் நம்ம ஃபர்ஸ்ட் செட் ஆஃப் ட்ரீட்மென்ட் அந்த பேசிக் டெஸ்ட் எல்லாம் பண்ணி ஆரம்பிப்போம்
இதுல ஒரு சில கேட்டகிரிஸ்க்கு ஆறு மாசத்துலயே ட்ரீட்மெண்ட்க்கு வாங்கன்னு நாங்க சொல்றோம் யார் அந்த மாதிரி இருக்கறவங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா இப்ப ஒரு ஃபீமேலுக்கு அந்த பெண்ணுக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ் பீரியட்ஸ் தள்ளி தள்ளி குளிக்கிறாங்க இல்ல கம்மியா படுது இல்ல சீக்கிரம் குளிச்சிடுறாங்க இல்ல ஆல்ரெடி ஏதோ ஹார்மோனல் ப்ராப்ளம்ஸ் டயாபடீஸ் தைராய்டு ப்ராப்ளம் சுகர் இந்த மாதிரி இருக்குறவங்களுக்கு அது இல்லாம ஏஜ் அதிகமா அதாவது 30 வயசுக்கு மேலதான் நாங்க கல்யாணமே பண்ணி இருக்கோம் அப்படின்றவங்களுக்கு எல்லாம் நம்ம ஒன் இயர் டைம் கட் ஆஃப் கொடுக்க முடியாது அவங்க எல்லாம் வந்து ஒரு சிக்ஸ் மந்த்ஸ்லயே வந்து ஒரு டாக்டரை பார்த்து பேசிக் டெஸ்ட் ஆச்சும் பண்ணிக்கிறது நல்லது
இது இல்லாம சில பேரு 35 ஏஜ் தாண்டி தான் ஃபர்ஸ்ட் மேரேஜ் பண்றாங்க பிரெக்னன்சிக்கு பிளான் பண்றாங்க அவங்களுக்கெல்லாம் வந்து இந்த சிக்ஸ் மந்த்ஸ் டைம் பீரியட் கூட வேண்டாம் சீக்கிரமே வந்து கல்யாணம் ஆன கையோட நம்ம ஒரு மருத்துவரை பார்த்து அட்லீஸ்ட் ட்ரீட்மென்ட் எடுக்குறோமோ இல்லையோ பேசிக்கா நம்மளுக்கு எல்லாம் நல்லா இருக்கா அப்படின்னு ஒரு செக்கப் பண்ணிக்கிறது கரெக்டா இருக்கும் சோ இந்த குழந்தையின்மைக்காக நம்ம அப்படி ட்ரீட்மெண்ட்க்கு வரும் போது கூட நிறைய டைம் வந்து ஒரு ஃபீமேல் மட்டும்தான் அந்த பெண் மட்டும்தான் வந்து ட்ரீட்மென்ட்காக வராங்க
SO இது ஒரு இது வந்து ஒரு தவறான கான்செப்ட் வீட்ல இருக்கற பெரியவங்களும் என்ன சொல்றாங்க நீ போ நீ போய் பாரு டாக்டர் அப்படின்னு சொல்லி அந்த பொண்ணை மட்டும் அனுப்புறாங்க சோ இதுவே வந்து நம்ம இப்ப என்னன்னா அந்த குழந்தையின்மைக்கு காரணங்கள் நம்ம பிரிச்சு பார்த்தோம்னா 50% அந்த பெண் காரணமா இருக்காங்க 50% ஈக்குவலி அந்த ஆணும் காரணமா இருக்காங்க சோ ஒரு ட்ரீட்மெண்ட்க்கு நம்ம போய் டாக்டரை செக்கப் பண்ண போகும்போது அந்த பெண் ஆண் அந்த தம்பதிகளா வந்து ஒரு ஃபெர்டிலிட்டி ட்ரீட்மென்ட் எடுக்குறது நல்லது அப்பதான் அவங்களுக்கு என்ன காரணங்கள்ன்றத நம்ம கண்டறிய முடியும்
RJ FAHIRA : ஓகே மேம். இப்போ செயற்கை கருத்தரிப்புங்கிறது இப்போ நிறைய பார்க்க முடியுது அப்படி செயற்கை கருத்தரிப்புனா என்ன அதை பத்தி ஷேர் பண்ணிக்கோங்க.!
Dr. AESHIKA : இப்போ வந்து செயற்கை கருத்தரிப்பு அப்படின்னு பார்த்தீங்கன்னா இப்போ நார்மலா சேர்ந்து இருக்கிறதை காட்டிலும் அடுத்த லெவல் ட்ரீட்மென்ட்ஸ் நம்ம சொல்றோம் அது என்னன்னா இன்ட்ரா யூட்ரைன் இன்செமினேஷன் ஐi அப்படிங்கறது ஒரு செயற்கை கருத்தரப்புல பேசிக் லெவல் ட்ரீட்மென்ட் அதுக்கு அடுத்தபடி பார்க்கிறதுதான் ஐவிஎப் இன்விட்ரோ பெர்டிலைசேஷன் அண்ட் icsi இக்ஸி அப்படின்னு சொல்றோம் சோ இது என்னன்னு பார்த்தீங்கன்னா ஃபர்ஸ்ட் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திக்க விரும்புறேன் இப்போ இந்த நம்ம பண்ற இந்த ஐயூ ஐவிஎப் இக்ஸி இந்த ப்ரொசீஜர்ஸ் எல்லாம் பார்த்தீங்கன்னா தே ஆர் கால்ட் அசிஸ்டட் ரீப்ரோடக்டிவ் டெக்னிக்ஸ் இது வந்து ஆர்டிபிஷியல் ரீப்ரோடக்டிவ் டெக்னிக்ஸ் கிடையாது
அதாவது செயற்கை அப்படின்றது ஒரு தமிழ்ல ஒரு தவறான பெயர்னு எனக்கு தோணுது சோ இதுல நம்ம என்ன பண்ண போறோம் அப்படின்னு பார்த்தீங்கன்னா ஐயூ ங்குறது விந்து ஊட்டல் ஹஸ்பண்டோட விந்து எடுத்து அதுல ஓடக்கூடிய விந்துகளை செப்பரேட் பண்ணி ஒரு சிரஞ்சு மூலமாக அந்த வைப்போட கர்ப்பப்பைல போடப்போறோம் இது ஐயூ ஐவிஎப் இன்விட்ரோ பெர்டிலைசேஷன் அந்த இன்விட்ரோக்கு இங்கிலீஷ்ல என்ன மீனிங்னா அவுட்சைடு தி பாடி ஒரு உடம்புக்கு வெளியில அந்த இடத்துல நம்ம அந்த கரு உருவாகுற அந்த பெர்ட்டிலைசேஷன்ற ப்ராசஸ் நடத்தப்போறோம்
சோ இதுதான் ஐவிஎப் இந்த ஐவிஎஃப் க்கும் இக்ஸிக்கும் என்ன வித்தியாசம் அப்படின்னு பார்த்தீங்கன்னா ஒரு கருமுட்டையை சுத்தி விந்தணுக்களை விட்டு தானாவே அந்த விந்தணு அணுக்கள் நீந்தி அந்த கருமுட்டையை பெர்ட்டிலைஸ் பண்றது ஐவிஎப் இக்ஸி ஐசிஎஸ்ஐ அப்படின்றதை பார்த்தீங்கன்னா நம்மளே ஒரு நல்ல ஓடக்கூடிய விந்தை செலக்ட் பண்ணி அதை சிரஞ்சு மூலமாக எடுத்து அந்த கருமுட்டைக்குள்ள ஒரு சிரஞ்ச வச்சு அதை நம்மளே உள்ள தள்ளிடுறது ஐசிஎஸ்ஐ எக்ஸி சோ இதெல்லாம்தான் வந்து செயற்கை கருத்தருப்பு அப்படின்னு நம்ம சொல்றது இது என்ன மாதிரியான காரணங்களுக்காக செயல்பட்டுட்டு இருக்கு செயற்கை கருத்தரப்பு வந்து நிறைய காரணங்களுக்காக நம்ம செய்யறோம்.
அது வந்து ஒரு ஆண்ல ஆணுக்கு இருக்கிற காரணங்கள் பெண்களுக்காக இருக்கிற காரணங்கள் எதுனாலும் எடுத்துக்கலாம் சப்போஸ் இப்ப ஆண்களுக்காக நம்ம பார்த்தோம்னா அந்த விந்தணுன்ற செமன் அனாலிசிஸ் டெஸ்ட் நம்ம பேசிக்கா பண்றோம் அந்த விந்தணுக்கள் குறைவாக இருக்கிறதும் அந்த விந்தணுக்கள்ல ஓடக்கூடிய தன்மை குறைவாக இருந்தாலோ இல்ல அந்த விந்தணுக்களுடைய உருவத்துல பிரச்சனைகள் இருக்கிறவங்களுக்கு இந்த ஐவிஎப் பண்ணலாம் இதை தாண்டி அந்த விந்தணுக்களே இல்லை ஏசோஸ்பெர்மியான்னு ஒரு கண்டிஷன் இருக்கு சோ அந்த விந்தணுவே இல்ல உங்களுக்கு சாம்பிள்ல கொடுத்த செம டெஸ்ட்ல
அப்படின்னா இந்த மாதிரி காரணங்களுக்காக நம்ம ஆண்களுக்கு ஐவி பண்றோம் இதை தாண்டி பெண்கள் சைடுல பார்த்தீங்கன்னா நிறைய விஷயங்கள் யோசிக்கலாம் அந்த கருமுட்டையோட எண்ணிக்கை குறைவாக இருக்கிறது கருமுட்டையோட வளர்ச்சி ஓவுலேட்டரி டிஸ்பங்க்ஷன் சொல்லுவோம் அதுக்கு அதுல ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலோ இல்ல இந்த கருக்குழாய்கள் இதுலதான் நம்ம அந்த பெர்ட்டிலைசேஷன்ற ப்ராசஸ் நார்மலா நடக்க வேண்டியது சோ அந்த கருக்குழாய்கள்ல அடைப்பு ஏதாச்சும் இருந்தாலோ இல்ல பெல்விக் இன்ஃபெக்ஷன்ஸ் இருந்தாலோ இல்லாட்டி கர்ப்பப்பை அங்கதான் குழந்தை தங்க வேண்டிய இடம் அந்த கர்ப்பப்பைல பார்த்தீங்கன்னா கட்டி இருப்பது ஃபைப்ராய்ட்ஸ் இல்ல வீக்கம் அடினோமயோசிஸ் இல்ல மொத்தமாகவே எண்டோமெட்ரியோசிஸ்ன்ற பிரச்சனை சில பேருக்கு இருக்கும்
இதெல்லாம் தாண்டி எல்லாமே செம டெஸ்ட் நார்மல் கருமுட்டைகள் நல்லா இருக்கு கருக்குழாய்கள்ல அடப்பு இல்லை இப்படின்னு சொல்றவங்கள அன் எக்ஸ்பிளைன் இன்ஃபெர்ட்டிலிட்டின்னு ஒரு கேட்டகிரி இருக்காங்க சோ அந்த மாதிரி ரீசன்ஸ்காக மட்டும்தான் நம்ம ஐவிஎப் செயற்கை கருத்தரிப்புக்கு போறோம்
RJ FAHIRA : ஓகே மேம். இப்போ இந்த செயற்கை கருத்தரிப்புங்கிறதை யாரெல்லாம் மேற்கொள்ளலாம் .?
Dr. AESHIKA : சோ இந்த செயற்கை கருத்தரிப்பு வந்து எடுத்தெடுப்புல பண்ற மாதிரி கிடையாது. இந்த ஏஆர்டிஸ் அசிஸ்டட் ரீப்ரோட் டெக்னாலஜிக்குனே வந்து சில ஆக்ட்ஸ் அண்ட் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு சோ இதன்படி என்ன சொல்றாங்கன்னா யாருக்கு ஒருத்தவங்களுக்கு இந்த ட்ரீட்மென்ட் கொடுக்கலாம் அப்படின்னு பார்த்தீங்கன்னா ஒரு ஆணா எடுத்துக்கிட்டோம்னா 21 வயசுல இருந்து 55 வயது இருக்கிறவங்களுக்கு நம்ம இதை ட்ரீட்மென்ட் கொடுக்கலாம் சோ 56 57 வயசு போனவங்களுக்கு கொடுக்க முடியாது
அண்ட் 21க்கு கம்மியா இருக்கறவங்களுக்கும் கொடுக்க முடியாது அதே மாதிரி ஒரு ஃபீமேல் கேட்டகிரிஸ்ல இதுக்கு ஏஜ் கட் ஆஃப் என்ன கொடுத்திருக்காங்கன்னா 21 டு 50 21ல இருந்து 50 வயது இந்த வரைக்கும் இருக்கிற ஃபீமேல்ஸ் மட்டும்தான் வந்து இந்த ட்ரீட்மெண்ட்ட உட்கொள்ள முடியும் இதுக்கு மேலேயும் கீழேயும் இந்த ட்ரீட்மென்ட் அளிக்க முடியாது இந்த செயற்கை கருத்தரிப்பு அப்படின்றதை செய்யறதுனால வேற ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்குமா ஜெனரலி நம்ம வந்து மெடிக்கல் ஃபீல்டுன்னு எடுத்தாலே நம்ம ஒரு ஜொரம்ன் வந்தா கூட ஒரு பாராசிட்டமால் நம்ம கொடுக்கிறோம் சோ அந்த பாராசிட்டமால் டேப்லெட்ஸ்க்கும் சில சைடு எஃபெக்ட்ஸ் எல்லாம் இருக்கத்தான் செய்யுது அதுக்காக நம்ம எடுக்குறது எடுக்காம இருக்கிறது இல்ல
சோ இப்ப நீங்க ஐவிஎப்னு பார்த்துகிட்டீங்கன்னா எல்லாருக்கும் என்ன ஒரு கண்ணோட்டம்னா நிறைய இன்ஜெக்ஷன்ஸா போடுறாங்க நிறைய பவர்ஃபுல் இன்ஜெக்ஷன்ஸா போடுறாங்க அப்படின்னுட்டு பட் நம்ம ஐவிஎப்ல கொடுக்கிற இன்ஜெக்ஷன்ஸ் என்னன்னு பார்த்தீங்கன்னா நம்ம பாடில நார்மலா சுரக்கக்கூடிய ஹார்மோன்கள் இந்த ஹார்மோன்களை நம்ம இன்ஜெக்ஷன்ஸா போட்டு அந்த கருமுட்டையை வளர வைக்கிறோம் சோ இதுக்கு இருக்கற சைடு எஃபெக்ட்ஸ் வந்து ஜெனரல் எனி டிரக்கு கொடுக்கிற மாதிரி ஒரு அலர்ஜிக் சைடு எஃபெக்ட்ஸ் இருக்கலாம் இல்ல போடக்கூடிய அந்த ஊசியா நம்ம போடுறதுனால
அந்த ஊசி போடும்போது வலி அந்த இடத்துல வீக்கம் இந்த மாதிரி இருக்கலாம். சோ ஆனாலுமே இப்ப வந்து ஐவிஎப் ல பார்த்தீங்கன்னா இன்னும் அட்வான்ஸ்மென்ட்ஸ்ல நிறைய சப்யூடேனியஸ் இன்ஜெக்ஷன்ஸ நம்ம கொடுக்கிறோம். அதாவது, பெயின்லெஸ் இன்ஜெக்ஷன்ஸ் மாதிரி ரொம்ப டீப்பா ஐஎம் இன்ஜெக்ஷன் தான் பெயின் ஃபுல்லா இருக்கும் சோ இந்த மாதிரி பெயின்லெஸ் இன்ஜெக்ஷன்ஸ் கூட இப்ப நம்மளுக்கு அட்வான்ஸ்மென்ட்ஸ்ல வந்துருச்சு சோ அந்த பெயின்ன்றது கூட ஒரு பெரிய விஷயமா இந்த ஐவிஎப் ல இருக்க போறது கிடையாது ஏன்னா நிறைய பேரு அது ஒரு பெயின் ஃபுல் ப்ரொசீஜர் அப்படின்னு நினைச்சுறாங்க டெய்லி ஊசி குத்திக்கிட்டே இருக்கணுமா அப்படின்ற மாதிரி சோ இப்ப அந்த அட்வான்ஸ்மென்ட்ஸ்ல நமக்கு பெயின்லெஸ் இன்ஜெக்ஷன்ஸும் வந்துருச்சு இதை தாண்டி வேற சைடு எஃபெக்ட்ஸ்ன்னு பார்த்தீங்கன்னா நம்ம ஐவிஎப் ட்ரீட்மென்ட் பண்ணும்போது அந்த கருமுட்டைகளை எடுக்கிற ப்ரொசீஜர் பேரு ஓவம் பிக்கப் அப்படின்னு சொல்லுவோம் அந்த ஓவம் பிக்கப் பண்ணும்போது அவங்களுக்கு அந்த நாள் மட்டும் ஒரு மயக்க மருந்து கொடுக்கிற மாதிரி இருக்கும்
அவங்களுக்கு இருக்கு சோ எனி சர்ஜிக்கல் ப்ரொசீஜர் நம்ம ஒரு ஜெனரல் சர்ஜரி ஒரு கட்டி எடுக்க போறோம் இல்ல ஒரு குழந்தைக்காக ஆபரேஷன் பண்றோம் எது பண்ணாலும் ஒரு அனஸ்தீசியா நம்ம கொடுப்போம் சோ அந்த மயக்க மருந்துக்கு இருக்கிற ரிஸ்க் தான் இந்த ப்ரொசீஜருக்கும் இருக்க போகுது அது இல்லாம வெரி ரேர் காம்ப்ளிகேஷன் ஐவிஎப் ல என்னன்னு பார்த்தீங்கன்னா ஒவேரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் சின்ட்ரோம் அப்படின்னு ஒரு சின்ட்ரோம் இருக்கு இதுல என்னன்னா நம்ம வந்து கருமுட்டைகள் எல்லாம் வளர்றதுக்காக ஊசி கொடுக்கும் போது நிறைய கருமுட்டைகள் வளர்ந்து அதுல இருக்க அதுல இருந்து சுரக்குற ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகுறதுனால ஒரு ஒரு பிரச்சனைகள் வருது என்ன பிரச்சனைன்னா உடம்புல அங்கங்க நீர் கோக்குற பிரச்சனை பட் இப்ப இருக்க அட்வான்ஸ்மென்ட்ஸும் அந்த ஸ்டிமுலேஷன் புரோட்டோகால்ஸ் சொல்லுவோம் அந்த ஊசி கொடுத்து வளர வைக்கிற புரோட்டோகால்ஸ் எல்லாம் நிறைய மாற்றங்கள் வந்தனால இப்ப இந்த ohs சின்ட்ரோம்ன்றது எந்த ஐவிஎப் சென்டர்லயும் வர்றதில்லை சோ எனக்கு தெரிஞ்சு செயற்கை கருத்தரப்புல இந்த மாதிரி பக்கவிளைவுகள் தான் இதை தாண்டி இதுக்குன்னு தனியான சைடு எஃபெக்ட்ஸ் எல்லாம் எதுவும் இருக்கான்னா கிடையாது
RJ FAHIRA : ஓகே மேம். இப்போ ஐவிஎப் மெத்தட்ல ஒரு குழந்தை பிறக்குதுன்னா அந்த குழந்தைக்கும் இயற்கையான முறையில பிறக்கிற குழந்தைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்குமா.?
Dr. AESHIKA : கரெக்ட் இது வந்து வந்து நிறைய மக்களுக்கு இருக்கிற ஒரு இது ஐவிஎப் ல ஏதோ பண்றாங்க செயற்கை கருத்தரிப்புன்னு வேற நம்ம சொல்லிட்டோம் சோ நம்ம பேபியே ஏதோ ஒரு நம்ம வந்து ஏதாவது இந்த ஜெனடிக் சேஞ்சஸ் எல்லாம் பண்ணி கொண்டு வர போறாங்களா அப்படின்னு இந்த க்ளோனிங் நம்ம சொல்றோம்ல அந்த மாதிரி ஏதாவது பண்ணிட போறாங்களாம் நிறைய பேர் நினைக்கிறாங்க பட் அப்படி கிடையாது இதுக்காக ஒரு பெரிய ஸ்டடிஸ் ஒரு ரிசர்ச் நடத்துனாங்க யூரோப்ல சோ அந்த இடத்துல வந்து ஒரு மில்லியன் கணக்கான நார்மலா பொறந்த பிள்ளைங்களையும் ஐவிஎப் மூலமா பிறந்த பிள்ளைங்களையும் அவங்க பொறந்ததுல இருந்து வளர்ந்த வரைக்கும் அவங்க ஸ்கூல் எஜுகேஷன் ஐக்யூ இது எல்லாமே வந்து டெஸ்ட் பண்ணி பார்த்திருக்காங்க அந்த ரிசர்ச் மூலமா என்ன ப்ரூவ் ஆயிருக்கு அப்படின்னா ஒரு ஐவிஎப்னால பொறக்கப்பட்ட குழந்தைக்கும் நார்மலா கன்சீவ் ஆகி பொறக்கப்பட்ட குழந்தைக்கும் எந்த ஒரு வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது அண்ட் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது, இப்ப நார்மலா கன்சீவ் ஆன பேஷன்ட்டுக்கும் குறைபாடுகள் வர வாய்ப்புகள் இருக்கு சோ இந்த ரிஸ்க்ஸ் வந்து எல்லாருக்குமே இருக்குதாம் அதே ரிஸ்க் தான் ஐவிஎப் மூலமா பிறக்குற பிள்ளைங்களுக்கும் இருக்க போகுதே தவிர்த்து இந்த ஐவிஎப்னால குறைபாடு உள்ள குழந்தை வருமா இல்லை இந்த ஐவிஎப்ல என் குழந்தை வந்து மெண்டலா ஏதாவது குறைவா இருக்குமா மத்தவங்கள விட கம்மியா இருக்குமா அப்படின்ற கம்பேரிசன்ல கிடையவே கிடையாது எல்லாமே நார்மல் அப்படின்றது ப்ரூவ் ஆயிருக்கு அண்ட் நிறைய ஜெனரேஷன் நம்ம வந்து 1978-ல இருந்து இந்த ஐவிஎப் எல்லாம் நடந்துட்டு இருக்கு சோ அதுல இருந்து இப்ப வரைக்கும் பார்த்தீங்கன்னா யாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் நம்ம கண்டுபிடிச்சது கிடையாது செயற்கை கருத்தறித்தல் மேற்கொண்டு இருக்கும் பெண்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பா இருக்கணும் இந்த செயற்கை கருத்தறிப்பு மேற்கொள்ளும்போது பெண்களுக்கு இருக்க ஒரு பெரிய விஷயம் என்னன்னா அந்த ஸ்ட்ரெஸ் அந்த மன அழுத்தம் அவங்களோட மெண்டல் ஹெல்த் அப்படியே டிராப் பண்ணி ஆயிடுது சோ, ஒரு ட்ரீட்மென்ட்ன்னு வந்து கவுன்சில் பண்ணும் போதும் டாக்டர்ஸ் கிட்ட கேட்கும்போதும் இன்ஜெக்ஷன்ஸ் போடும்போதும் எல்லாம் நல்லாதான் இருக்காங்க பட் ஒன்ஸ் அந்த கருவை எடுத்து நம்ம கர்ப்பப்பைல வச்சிட்டோம் இனிமே வந்து அது ஒட்டுறதை பொறுத்து தான் நம்மளுக்கு ரெண்டு வாரம் கழிச்சு நம்ம டெஸ்ட் பண்ணி பார்க்க போறோம் அப்படின்னு சொன்ன உடனே அப்படியே ஒரு மெண்டலி அவங்க வந்து ரொம்ப டிப்ரஷன்க்காகவும் ஆன்சைட்டிக்கும் போயிடுறாங்க இதுக்கு காரணம் என்னன்னா இவ்வளவு செலவு பண்ணி இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இன்ஜெக்ஷன்லாம் நம்ம போட்டு கடைசில வச்ச காரணம் அந்த லாஸ்ட் ஸ்டெப் தக்க வைக்க முடியுமா முடியாதான்ற எல்லாருக்கும் ஒரு ஒரு எக்ஸாம் ரிசல்ட்னாலே நம்ம எல்லாம் ஒரு ஒரு பதற்றத்துக்கு வரும்ல சோ இந்த ரிசல்ட்டுக்கு ரொம்ப பதற்றப்பட ஆரம்பிச்சுறாங்க சோ எப்பவுமே பார்த்தீங்கன்னா இந்த பெர்டிலிட்டிக்காக எடுக்குற பேஷன்ட்ஸ் அந்த லாஸ்ட் டூ வீக்ஸ் வந்து அடுத்த யூரின் டெஸ்ட் பார்க்க போறோம் அடுத்த பிளட் டெஸ்ட் பார்க்க போறோம்னா ரொம்ப மன அழுத்தத்துக்கு உள்ளாகுறாங்க சோ அந்த டைம்ல இப்ப இந்த மாதிரி ட்ரீட்மென்ட் எடுக்குறவங்க கொஞ்சம் டென்ஷன் ஃப்ரீயாவும் ஸ்ட்ரெஸ் ஃப்ரீயாவும் இருந்துக்கிறது முக்கியமான விஷயம் இதை எப்படி நம்ம இருந்துக்கலாம் அப்படின்னா ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் வந்து எல்லாரும் என்ன சொல்றாங்கன்னா இந்த மாதிரி ட்ரான்ஸ்பர் பண்ண பிறகு எம்பிரியோ ட்ரான்ஸ்பர் இந்த கரு எடுத்து எடுத்து வச்ச பிறகு பெட் ரெஸ்ட்ல இருந்துக்கிறது அப்படின்னு சொல்றாங்க பட் இப்ப இருக்க காலகட்டத்துல என்ன சொல்ல வராங்கன்னா பெட் ரெஸ்ட் அவசியம் கிடையாது நீங்க உங்களோட ரெகுலர் வேலைகளை கண்டினியூ பண்ணுங்க ஏன்னா அந்த பெட் ரெஸ்ட்ல நம்ம உட்கார்ந்துட்டு இருந்தோம்னா நம்மளோட யோசனை பூரா எங்க இருக்க போகுதுன்னா அந்த குழந்தை எப்படி தங்குதா தங்குதான்னு நினைக்க போறோம் பட் அதர் வைஸ் நம்மளோட நார்மல் வொர்க்க நம்ம பர்ஸ்யூ பண்ணும்போது இந்த டிஸ்ட்ராக்ஷன்ஸ் நம்மளுக்கு கொஞ்சம் கிடைக்குது அது இல்லாம அந்த டைம்ல என்ன பண்ணலாம் அப்படின்னா நல்ல புத்தகங்கள் படிக்கிறது என்னென்ன ரிலாக்சேஷன் உங்களுக்கு பெஸ்ட்ன்னு தோணுதோ அந்த ரிலாக்சேஷன் எல்லாமே பண்ணலாம் அதே சமயம் இந்த மாதிரி ட்ரீட்மென்ட்ஸ் எடுக்கும்போது இது செயற்கை கருத்தரப்புன்னு இல்ல நார்மலா ட்ரீட்மென்ட் எடுக்குறவங்க கூட அவங்களோட டயட்ட கொஞ்சம் ப்ராப்பரா மெயின்டைன் பண்றது ரொம்ப அவசியமா இருக்கு சோ என்ன மாதிரி டயட் எடுத்துக்கலாம் அப்படின்னு பார்த்தீங்கன்னா நல்ல ஆன்டி ஆக்சிடென்ட் ரிச் டயட்ஸ் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் வந்து எதுல அதிகமா இருக்குன்னு பார்த்தீங்கன்னா பழங்களிலும் பச்சை காய்கறிகளிலும் அதிகமா இருக்கு சோ இந்த மாதிரி டயட்ஸ் நிறைய உட்கொள்றதும் அதிக சுகர் இன்டேக் நிறைய எண்ணெய் பொருட்கள் மைதா ஐட்டம்ஸ் இது இல்லாம சரியா குக் பண்ணாத நான்வெஜ் ஐட்டம் எஸ்பெஷலி சீ ஃபுட்ஸ் இந்த மாதிரி ஃபுட்ஸ் எல்லாம் அந்த டைம்ல அவாய்ட் பண்ணிக்கலாம் எக்ஸசிவா காபி இன்டேக் இதெல்லாம் கொஞ்சம் குறைச்சிக்கிறது நல்லது இதை தாண்டி அந்த ரெஸ்ட்ங்கிறது சில பேர் வந்து ரொம்ப பதற்றப்படுறதுனால எல்லாருமே கொஞ்சம் பெட் ரெஸ்ட்ல இருந்துக்கோங்க ஸ்ட்ரைன் பண்ணாதீங்க அப்படின்னு சொல்றோமே தவிர்த்து கம்ப்ளீட்லி பெட் ரெஸ்ட்ல இருக்கணுமான்னு அவசியம் கிடையாது மத்தபடி நம்மளோட மெண்டல் ஹெல்த்த நல்லா வச்சுக்கிட்டாலே இந்த பாதுகாப்பா நம்மளால இருந்துக்க முடியும்.
RJ FAHIRA : இந்த டைம்ல இப்ப வந்து செயற்கை கருத்தறித்தல் ட்ரை பண்றாங்க அப்படின்னா ஃபியூச்சர்ல புற்றுநோய் வர்றதுக்கான வாய்ப்பு இருக்கு அப்படின்னு சொல்லப்படுது அது உண்மையா அதை பத்தி கொஞ்சம் ஷேர் பண்ணுங்க.!
Dr. AESHIKA : இது வந்து நிறைய வந்து இந்த மாதிரி கிளம்பிட்டு இருக்கு ஆக்சுவலி வந்து ட்ரீட்மென்ட் இந்த செயற்கை கருத்தரிப்பு பண்றதுனால புற்றுநோய் வரப்போகுதுன்னு ஆக்சுவலி என்னன்னா நம்ம செயற்கை கருத்தரப்புல பேசிக்கா சயின்ஸ் பிரகாரம் பார்த்தீங்கன்னா நம்ம உடல்ல இருக்கற ஹார்மோன்ஸ்தான் இன்ஜெக்ஷனா போடப்போறோம் அண்ட் அதோட ஆக்ஷன் வந்து பார்த்தீங்கன்னா அந்த சமயத்துக்கு மட்டும்தான் இருக்குமே தவிர்த்து அது தொடர்ந்து வருஷக்கணக்கா நம்ம பாடில சர்க்குலேட் ஆகி பின்னாடி ஒரு புற்றுநோய் கொடுக்க போறது கிடையாது சோ எனக்குன்னு இல்ல எல்லாருக்குமே வந்து தெளிவா வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா ஐவிஎப்னால கேன்சர்ன்றது யாருக்கும் வரப்போறதுகிடையாது பட் என்ன நம்மளுக்கு ஏன் இந்த வதந்திகள் வரதுக்கு ஒரு வாய்ப்புகள் இருக்குன்னு நான் நினைக்கிறேன்னா யூஸ்வலி ஒரு பேஷன்ட் ஐவிஎப் ட்ரீட்மென்ட்காக நம்மளுக்கு வரும்போது பேசிக்கா நம்ம எக்ஸாமினேஷன் அண்ட் டெஸ்ட் பண்றோம் அந்த எக்ஸாமினேஷன்ல பிரஸ்ட் எக்ஸாமினேஷன் மார்பை வந்து நம்ம எக்ஸாமின் பண்ணி பார்க்கிறோம் சோ அப்போ சில பேருக்கு கட்டிகள் இருப்பதை கண்டறியலாம் இது இல்லாம நம்ம என்ன பண்றோம்னா ஒரு பாப்ஸ்மியர் டெஸ்ட் அப்படின்னு எடுக்கணும் அது எதுனா கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான ஒரு ஸ்கிரீனிங் டெஸ்ட் இதை நம்ம பேசிக்கா எல்லாருக்கும் பண்றோம் அது இல்லாம ஸ்கேன் பார்க்கும்போது கர்ப்பப்பையோட திக்னஸ் அதிகமா இருக்குறவங்களுக்கு அதை ஒரு பயாப்சி எடுத்து சென்ட் பண்றோம் இது இல்லாம லேப்ரோஸ்கோபி சர்ஜரிஸ் பண்ணும்போது கட்டிகள் அந்த மாதிரி எதுவும் இருந்துச்சுன்னா அந்த கட்டியை நம்ம எடுத்துட்டு டிஷ்யூ பரிசோதனைக்கு அனுப்புறோம் சோ இந்த மாதிரி நம்ம முன்னாடியே ஸ்கிரீன் பண்றதுனால மேபி ஐவிஎப் ட்ரீட்மென்ட் எடுக்கும்போது அவங்களுக்கு அந்த கண்டறிதல் சான்சஸ் அதிகமா இருக்கலாம் ஒருத்தவங்களுக்கு இருக்கு வாய்ப்பு இருக்குன்றத கண்டுபிடிக்கிற வாய்ப்புகள் அதிகமா இருக்கலாம் இன்னும் சொல்லப்போனா என்ன பொறுத்தவரைக்கும் புற்றுநோய் இருக்கிற பேஷன்ட்ஸ்க்கு இது வந்து ஒரு ஐவிஎப் ங்குறது ஒரு வரமாதான் இந்த காலத்துல அமையுது ஏன்னு கேட்டீங்கன்னா யங் ஏஜ்ல ஒரு ஃபீமேலுக்கோ ஒரு மேலுக்கோ ஒரு ஆண் பெண்ணுக்கு ரெண்டு பேருக்கும் ஏதோ புற்றுநோய் வருது அதுக்காக புற்றுநோய்க்காக கீமோதெரபிக் ட்ரீட்மென்ட்ஸ் ரேடியேஷன் இந்த மாதிரி எல்லாம் பண்ணும்போது பார்த்தீங்கன்னா அவங்களுடைய அந்த பெர்டிலிட்டி பொட்டன்ஷியல் குறையும் ஏன்னா பெண்களுக்கு அந்த கருமுட்டை உற்பத்தி குறைஞ்சு போயிடும் ஆண்களுக்கு அந்த விந்தணுக்கள் ப்ரொடக்ஷன் குறைஞ்சு போயிரும் பட் இப்போ அந்த மாதிரி இருக்குறவங்களுக்கு ஹீமோதெரபி போறதுக்கு முன்னாடி ஐவிஎப் மூலமாக அவங்களுடைய கருமுட்டைகளை பிரிசர்வ் பண்றதுக்கும் அவங்களுடைய விந்தணுக்களை பிரிசர்வ் பண்ணி வச்சிட்டு ஒன்ஸ் அந்த ட்ரீட்மென்ட் முடிச்ச பிறகு திருப்பி அந்த பெர்டிலிட்டி அவங்களுக்கு திருப்பி கொடுக்குறதுக்கு ஐவிஎப் மூலமாக சாத்தியம் உண்டு சோ என்னை பொறுத்தவரைக்கும் புற்றுநோய்க்கு ஐவிஎப் ஒரு வரமாதான் இருக்கு தவிர்த்து ஐவிஎப் புற்றுநோய்கொடுக்கிறதா இல்லை.
RJ FAHIRA : இப்போ நீங்க நிறைய பேஷன்ட்ஸ பார்க்கிறதுனால இந்த மெத்தட் பத்தி மக்களுடைய மனநிலை எப்படி இருக்குன்னு நினைக்கிறீங்க.?
Dr. AESHIKA : ஆக்சுவலி பார்த்தீங்கன்னா எல்லாரும் பெர்டிலிட்டி ட்ரீட்மென்ட்ன்னு வராங்க சோ ஒரு கட்டத்துக்கு மேல அவங்க ஐவிஎ்க்கு தான் போகணும்னு சொன்ன பிறகு அந்த ட்ரீட்மெண்ட்ட பிரேக் எடுத்துறாங்க ஏன்னா இன்னுமே வந்து நிறைய விழிப்புணர்வு ஐவிஎப் பத்தி இல்லை எல்லாமே வெளியில சொல்ற மாதிரி டெஸ்ட் டியூப் பேபி செயற்கை கருத்தரிப்பு இதெல்லாம் வந்து ஒரு கன்பியூசிங் டெர்ம்ஸா இருக்கு டெஸ்ட் டியூப்ல பேபி பொறக்க போறது கிடையாது அது வந்து சின்ன ஒரு புரிதலுக்காக அந்த மாதிரி பேர் வச்சிருக்காங்க அண்ட் செயற்கையினால இது வந்து ஏதோ செயற்கையா பண்றாங்க ரொம்ப ஆர்டிபிஷியலா கிரியேட் பண்றாங்க அப்படி எல்லாம் நினைக்கிறாங்க பட் நம்ம இதுல செயற்கையா ஒன்னும் பண்ண போறது கிடையாது நம்ம வந்து அந்த பெண்ணுக்கு வர கருமுட்டைகள் தான் எடுக்கப்போறோம் அந்த ஆணுடைய விந்தணுக்கள் தான் எடுத்து நம்ம இதை பண்ணப்போறோம் என்ன அந்த பெர்ட்டிலைசேஷன் ப்ராசஸ் மட்டும் நம்ம உடம்புக்குள்ள கருக்குழாய்கள்ல நடக்க வேண்டிய ப்ராசஸ் ஒரு பிரிட்ஜ் மாதிரி இன்குபேட்டர்ஸ்ல அது நடக்கப்போகுது அந்த கருக்குழாய்ல என்னென்ன தன்மையில டெம்பரேச்சர் ph கேஸஸ் எப்படி மெயின்டைன் ஆகணுமோ அதே மாதிரி இந்த இன்குபேட்டர்ல வந்து மெயின்டைன் பண்ணி நம்ம பண்ண போறோம் பட் இத தாண்டி மக்களுக்கு அடுத்த ஒரு பெரிய விஷயம் பிரச்சனை என்ன ஐவிஎப் பொறுத்தவரைக்கும் அப்படின்னா இது வந்து ஒரு லோவர் சோசியோ எகனாமிக் கிளாஸஸ்ல இருக்குறவங்களால எடுத்துக்கொள்ள முடியல ஏன்னா அதுக்குரிய செலவுகள் அதிகமாக இருக்கு சோ இதுக்கும் வந்து இப்போ நிறைய எக்கனாமிக்கலா பண்ற ஐவிஎஸ் எல்லாம் ஸ்டார்ட் பண்றாங்க மெடிக்கல் காலேஜஸ்ல கொஞ்சம் ஐவிஎப்ஸ் எல்லாம் வரப்போகுது சோ இந்த மாதிரி அந்த ஒரு தடங்களும் அவங்களுக்கு போகப்போகுது இதெல்லாம் தாண்டி என்னன்னா ஒரு பெரிய பிரஷர் எல்லாரும் என்ன நினைச்சுக்கிறாங்க பக்கத்து வீட்டுக்கு எல்லாம் தெரிஞ்சிடக்கூடாது நம்ம வந்து நார்மல் பெர்டிலிட்டி ட்ரீட்மென்ட் எடுத்தாலே யாருக்கும் தெரியக்கூடாது அப்படின்ற காலத்துல நம்ம இருக்கோம் பட் இப்போ ஐவிஎப் ட்ரீட்மென்ட் எடுக்குறீங்களா அப்படின்னு எல்லாம் வாயை பொலக்குற அளவுக்கு சில தடங்கள்கள் இன்னுமே இந்த சொசைட்டி கீழ இருந்துகிட்டு தான் இருக்கு மே பி நம்ம மெட்ரோ சிட்டிஸ் சென்னை இந்த மாதிரி இடங்கள்ல இது கொஞ்சம் போயிடுச்சு எல்லாரும் எடுத்தெடுப்புல வாலண்டியரா வந்து ஐவிஎப் ட்ரீட்மென்ட்ஸ் எடுத்துக்குறதுக்கு எல்லாம் வராங்க பட் இன்னுமே பெரிஃபரி சைட்ஸ்ல பார்த்தீங்கன்னா மக்கள் வந்து இதை வந்து ஒரு வேண்டாம் அப்படின்ற ஒரு மனப்பான்மையில வச்சிருக்காங்க அது இல்லாம அடுத்த செலவுக்கு வருத்தப்படுறாங்க அது இல்லாம இந்த இன்ஜெக்ஷன்ஸ் இதெல்லாம் வந்து அவங்களுக்கு புதுசா இருக்கு இந்த மாதிரி வரவங்களுக்கு ஈஸியா எடுத்துக்க முடியல அதை அக்செப்ட் பண்ண முடியல சோ இந்த மனப்பான்மை எனக்கு நிறைய பேஷன்ட்ஸ்க்கு இருக்கிறதை நாங்க பார்க்கிறோம் இந்த மெத்தட்ல டோனர் ஸ்பெர்ம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கம டோனர் ஸ்பெர்ம் அப்படிங்கறது வந்து யாருக்கு தருவோம்ன்றதை ஃபர்ஸ்ட் தெரிஞ்சுக்கணும் யார் ஒருத்தவங்களுடைய விந்தணுக்கள் அவங்க ஹஸ்பண்டோட விந்தணுக்கள் சுத்தமாக இல்லை ஏசோஸ்பெர்மியா அப்படின்ற ஒரு கண்டிஷன் இருக்கு அந்த மாதிரி இருக்கோ இல்ல சிவியர் ஓட்ஸ் சிவியர் ஒலிகோ அஸ்தினோ டெரட்டோசோஸ்பெர்மியா அப்படின்னு சொல்லுவோம் அதாவது சிவியராக விந்தணுக்கள் கவுண்டும் குறைவு ஓடக்கூடிய விந்தணுக்கள் குறைவு அண்ட் அதோட உருவத்திலயும் பிரச்சனைகள் இந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு நம்ம டோனர் ஸ்பெர்ம்ஸ் சொல்றோம் பட் ஒரு ஐவிஎப் ஸ்பெஷலிஸ்டா எல்லாருக்கும் இருக்கிற ஃபர்ஸ்ட் பிரிபரன்ஸ் என்னன்னா முடிந்த அளவுக்கு அந்த தம்பதிகளுடைய கருமுட்டைகளையும் விந்தணுக்கள் எடுக்கிறதுதான் இப்ப நான் சொன்னேன்ல ஏசோஸ்பெர்மியா அந்த விந்தணுவே சுத்தமா இல்ல அப்புறம் எப்படி நீங்க எடுப்பீங்க அப்படின்ற சில கொஸ்டின்ஸ் இருக்கலாம் இந்த ஏசோஸ்பெர்மியா அப்படின்னு இருக்குறவங்களுக்கு என்ன பண்ணுவோம்னா சில மேலுக்கு அது ரீசன்ஸ் என்னன்ற டெஸ்ட் எல்லாம் ஹார்மோன் டெஸ்ட் ஸ்கேன்ஸ் எல்லாம் முடிச்சிட்டு என்ன ரீசன்ஸ் கண்டுபிடிச்சிட்டு இது அடப்பு பிரச்சனைகள்னால வரும் வருதா இல்ல உற்பத்தி பிரச்சனைகள்னால வருதா அப்படின்றத நம்ம பார்த்துட்டு சப்போஸ் இது உற்பத்தி பிரச்சனையினால வருது அப்படின்னா அந்த விரையிலிருந்து எக்ஸ்ட்ராக்ட் பண்ணி எடுக்கிற ஸ்பெர்ம் எக்ஸ்ட்ராக்சன் டெக்னிக்ஸ் அந்த விரையிலிருந்து நம்ம வெளியில அந்த விந்தணுக்கள் எடுத்து இருக்கா விந்தணு இருக்கா அதுல அப்படின்றதை மைக்ரோஸ்கோப்ல வச்சு பார்த்து அதுலயும் இல்ல இது வராது இல்ல வேற ஏதோ ஜெனடிக் ரிஸ்க்ஸ் மரபணு பிரச்சனைகள் வரதுக்கு வாய்ப்புகள் இருக்கு இந்த மாதிரி இருக்குறவங்களுக்கு தான் வந்து டோனர் ஸ்பெர்ம்க்கு போறோம் சோ இது வந்து எடுத்து அடுப்புல டோனர் ஸ்பெர்ம் டோனர் ஸ்பெர்ம்னு யாருக்கும் போடப்போறது கிடையாது டோனர் ஊசைட்ஸ் அதாவது கருமுட்டைகளும் நம்ம யாருக்குமே வந்து அந்த டோனருக்கு ஃபர்ஸ்ட் பிரிபரன்ஸ் கொடுக்கிறது கிடையாது எல்லாருக்குமே வந்து ஃபர்ஸ்ட் செல்புக்கு தான் பிரிபரன்ஸ் தரும்.
RJ FAHIRA : ஓகே மேம். இதுவரையும் இந்த செயற்கை கருத்தறித்தல் குழந்தையின்மைக்கான நிறைய விழிப்புணர்வு தகவல்களை ஷேர் பண்ணிக்கிட்டீங்க அதிரை பன்மலை நேயர்களுக்கு நீங்க சொல்ல வர விஷயங்கள் என்ன.?
Dr. AESHIKA : அதிரை பன்மலை நேயர்களுக்கு நான் சொல்ற சில விஷயங்கள் என்னன்னா நான் சொன்ன மாதிரி கரெக்டான டயத்துக்கு ட்ரீட்மென்ட் எடுக்க பாருங்க அது இல்லாம குழந்தையின் மட்டுமே ஒரு எண்ட் ரிசல்ட் என்னோட விதி அவ்வளவுதான் அப்படின்னு நினைச்சு யாருமே வந்து அவங்களோட முடிவை நீங்க எடுத்துக்க கூடாது குழந்தையின்மைக்காக கரெக்டான குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்களையும் கரெக்டான ட்ரீட்மெண்ட்டையும் அதை கரெக்டான நேரத்துலயும் பெர்சிஸ்டன்ட்டா அதாவது ஒரு டாக்டரை பார்த்துட்டு திருப்பி ஒரே மந்த் ரெண்டு மன்த்ல பாசிட்டிவ் வரலைன்னா உடனே அடுத்த டாக்டருக்கு ஷிப்ட் ஆகுறது சோ இந்த மாதிரி இல்லாம பேஷன்ட்டா பொறுமையாக நம்ம ட்ரீட்மென்ட் செய்தோம்னா எல்லாருக்குமே அந்த குழந்தை வரும்ங்கிறது உண்டு அதே சமயம் இந்த குழந்தை வரம் வேண்டும்ன்றதுக்காக ரொம்ப மன அழுத்தத்துக்கும் டென்ஷனுக்கும் ஸ்ட்ரெஸ்ஸுக்கும் அந்த அந்த ட்ரீட்மென்ட் எடுக்க போக வேண்டாம். எவ்வளவுக்கு எவ்வளவு நீங்க ரிலாக்ஸ்டா இருக்குறீங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட்ஸ் கிடைக்கும் அதை நாங்க நிறைய பேருக்கு பார்த்திருக்கோம் அதே மாதிரி சமுதாயத்துக்கு நான் சொல்ல வேண்டியது ஒரே விஷயம் என்னன்னா யாரா இருந்தாலும் உங்க ஃபேமிலில உங்க பிரண்ட்ஸ் உங்க நெய்பர்ஸ் யாரா இருந்தாலும் குழந்தை இல்ல கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் மூணு மாசம் உடனே எப்போ குழந்தை எப்ப குழந்தை அப்படின்ற பிரஷரை அவங்களுக்கு கொடுக்காதீங்க எப்ப குழந்தைன்ற அந்த தம்பதிகள் முடிவு செய்யட்டும் எப்ப குழந்தை வருமோ அப்ப வரட்டும் இந்த கொஸ்டினே வந்து இப்ப வந்து ஸ்டாப் பண்ணிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன் ஏன்னா நிறைய பேர் வரவங்க அவங்க வந்து ஒரு மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்கோட ஓகே நாங்க இப்படி பிளான் பண்ணிக்கலாம்னு தான் இருந்தோம் மேடம் ஆனா எங்க வீட்ல கேக்குறாங்க எங்க அத்தை கேக்குறாங்க எங்க பக்கத்து வீட்டுக்காரங்க இன்னுமா இன்னுமா மூணு மாசம் தான் ஆகுது ஆனா இன்னுமா இன்னும் குழந்தை தங்கல தள்ளி போயிட்டு போகலையா பீரியட்ஸ் குளிச்சிட்டீங்களான்னு அப்படிலாம் கேக்குறாங்க சோ இந்த சொசைட்டி வந்து அந்த குழந்தை அந்த குழந்தையின்மை இந்த உங்களுக்கு குழந்தை இன்னும் உண்டாகலையா அப்படின்னு கொஸ்டின்ஸ்க்கு எழுப்புறதையும் இங்க போய் அங்க போய் பாருங்க இப்பவே பாருங்கன்ற மாதிரி அவங்களுக்கு பிரஷர் தரதையும் கொஞ்சம் விட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் எனக்கு இந்த வாய்ப்பளித்த அதிரை எப்எம்க்கு மிக்க நன்றி
நமது சமூகம்... நமது நலன்...
Comments
Post a Comment