"தேசிய சுற்றுலா தினம்"
ADIRAI FM 90.4 BLOGGER

"தேசிய சுற்றுலா தினம்"
சுற்றுலா (tourism) என்பது தமது வழக்கமாக வாழும் இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும்.நாட்டின் பல்வேறு சுற்றுலா சலுகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாட்டில் சுற்றுலாத் துறையில் பணிபுரியும் மக்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி இந்தியாவில் தேசிய சுற்றுலா தினம் (இந்தியா) கொண்டாடப்படுகிறது. மாநிலங்கள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மாநில சுற்றுலா வாரியங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழக்கமான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெறக் கூடாது"
இது உங்கள் அதிரை பண்பலை 90.4
நமது சமூகம்... நமது நலன்....
Comments
Post a Comment