முடக்கு வாதம் (RA) விழிப்புணர்வு தினம்

                              ADIRAI FM 90.4 BLOGGER

       

முடக்கு வாதம் (RA) விழிப்புணர்வு தினம்

முடக்கு வாதம் அல்லது சரவாங்கி (Rheumatoid arthritis; RA) என்பது நாள்பட்ட, உள்பரவிய அலர்ஜியினை  உருவாக்கும் ஓர்  உடல்நல  சீர்கேடாகும். 
ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 2 ஆம் தேதி, முடக்கு வாதம் விழிப்புணர்வு தினத்தைக் கடைப்பிடிக்க உலகளாவிய வாத நோய் சமூகம்ஒன்றுகூடுகிறது.
இந்நோய், பல திசுக்களையும்  உடல்உறுப்புகளையும் பாதிக்கும் என்றாலும் முதன்மையாக வளையுந்தன்மையுடைய புற நீர்ம மூட்டுகளையே (synovial joints) அதிகம் தாக்குகிறது. இந்நோய் நிகழ்வு, மூட்டுறை செல்கள்  மிகப்பெருக்கமடைவதால் (hyperplasia) உண்டான மூட்டுப்பை வீக்கம், அதிகப்படியான மூட்டுறை (synovial fluid), நாரிழைய வளர்ச்சியினால் மூட்டுச்சவ்வில் உருவான படலம் (pannus) ஆகியவற்றினால் இரண்டாம் பட்சமாக விளையும் மூட்டுகளைச் சுற்றியுள்ள உறையின் மீதான அழற்சித் தாக்குதலை உள்ளடக்கியதாகும். இப்பிணிக்குரிய நோய் நிகழ்முறையினால் பொதுவாக மூட்டுக் கசியிழையம்   (articular cartilage) அழிவடைவதும், மூட்டுகளில் எலும்பு  (ankylosis) ஏற்படுவதும் நிகழ்கிறது. முடக்குவாத நோய் பரவலான அழற்சியை நுரையீரல்களிலும்  , இதய  உறையிலும் (pericardium), நுரையீரல் உறையிலும் (pleura), விழிவெண்படலத்திலும் (sclera), தோலுக்கடியில்  உள்ள திசுக்களில்  உருண்டைவடிவச் சிதைவுகளையும் (nodular lesions) ஏற்படுத்துகிறது. முடக்குவாத நோய் தோன்றுவதற்கான காரணங்கள் தெரியாவிட்டாலும், தன்னெதிர்ப்பு காரணிகள் நாள்பட்டநோய் உருவாவதற்கும், நோய் தீவிரமடைவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, முடக்கு வாதம் ஒரு உள்பரவிய தன்னெதிர்ப்பு நோயாகக் கருதப்படுகிறது.. 


                                                           நமது சமூகம்... நமது நலன்....



Comments

Popular posts from this blog

கணிதமா... கடினமா... MATHEMATICS DAY | கணிதப் பட்டதாரி ஆசிரியை சுதா M.sc....

இன்றைய காலத்தின் பிடியில் இளைஞர்கள் - National Youth Day _2025 (Jan 12)